தென்னாப்பிரிக்காவில் சிங்கம் ஒன்று சாலையில் நிற்கும் புகைப்படம் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் மத்தியப் பிரதேசம், சாத்புரா காட்டில் புலிகள் ஒன்று குடும்பமாக சாலையின் நடுவே ஓய்வெடுத்து விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அண்மையில், தென்னாப்பிரிக்காவில் சிங்கம் ஒன்று சாலையின் நடுவே நிற்கும் புகைப்படம் வைரலானது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம், சாத்புரா காட்டில் சாலையின் நடுவே 4-5 புலிகள் குடும்பமாக ஓய்வெடுத்து விளையாடியுள்ளன. இதனைப் பார்த்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தேதி குறிப்பிடப்படாத இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ரவீந்திர மணி திரிபாதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், இரண்டு புலிகள் சாலையின் நடுவில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் 2 புலிகள் நிதானமாக சாலையில் உலா வருகின்றன. மத்தியப் பிரதேசத்தின் சதபுடா காடுகளீல் சாலையோரத்தில் பெரிய குடும்பமாக புலிகள் காணப்படுகிறது என்று வனத்துறை அதிகாரி ரவீந்திர மணி திரிபாதி குறிப்பிட்டுள்ளார்.
காட்டில் உள்ள சாலையில் புலிகள் குடும்பமாக இருக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்ததிலிருந்து இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டே உள்பட பலர் டுவிட்டரில் பகிந்துள்ளனர். இந்த வீடியோவைப் பற்றி ரமேஷ் பாண்டே குறிபிடுகையில், “பெக், பன்னா, தடோபா மற்றும் துத்வா ஆகிய இடங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தின் சாத்புரா காட்டு புலிகளின் வீடியோவைப் பார்க்க வேண்டியது அவசியம். 4 அல்லது அதற்கு மேற்பட்ட புலிகளை அடிக்கடி பார்ப்பது பத்தாண்டுகளுக்கு முன்பு சாதாரணமான ஒன்று இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த வனவிலங்கு ஆர்வலர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோ லாக்டவுன் முடிந்த பிறகு ஒரு காடுகளில் வனவிலங்குகளைப் பார்க்க பயணம் செய்ய தூண்டுவதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"