குட்டிபுலியை ஈன்றெடுத்த தாய் புலி: ட்விட்டரில் கிடைத்த பெரும் வரவேற்பு

சிறப்பு கண்காணிப்பில் இருக்கும் ஒரு விலங்கைக் கண்காணிப்பதற்கான ரேடியோ காலர்.

சிறப்பு கண்காணிப்பில் இருக்கும் ஒரு விலங்கைக் கண்காணிப்பதற்கான ரேடியோ காலர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tigress Gives birth to cub at sariska

Tigress Gives birth to cub at sariska

இந்திய வன அலுவலர் (ஐ.எஃப்.எஸ்) பர்வீன் கஸ்வான், சாரிஸ்கா ரிசர்வ் பகுதியில் புலி தனது குட்டியை ஈன்றெடுத்ததாக, சமீபத்தில் ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டார்.

Advertisment

அவர் குட்டியுடன் இருக்கும் தாய் புலியின் படத்தை பதிவிட்டு, "கோவிட்-19க்கு இடையில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இது புலி எஸ்.டி-10, இவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள். இருவரும் சாரிஸ்காவில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதைக் காணலாம். இது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் ஒரு காலத்தில் சாரிஸ்கா தனது புலிகள் அனைத்தையும் இழந்தது. அதனால் அவற்றை மீட்க ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டது”. என்றார்.

கஸ்வான் வெளியிட்டிருந்த படத்தில், தாய் புலி சாரிஸ்கா ரிசர்வ் பகுதியில் தண்ணீர் குடிக்கிறது. குட்டிபுலியோ அம்மாவுடன் விளையாடுகிறது. கஸ்வான் சொல்வதைப்போல், இந்த செய்தி உண்மையில் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஒரு காலத்தில் சரிஸ்கா அதன் அனைத்து புலிகளையும் இழந்தது. இப்போது புலிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

Advertisment
Advertisements

நீங்கள் கவனமாகப் பார்த்தால், புலியின் கழுத்தில் ஒரு காலரைக் காண்பீர்கள். கஸ்வான் தனது அடுத்த ட்வீட்டில் இது குறித்து விளக்கினார். "கழுத்தில் உள்ள பெல்ட்டைப் பற்றி அனைவரும் கேட்கிறார்கள். இது சிறப்பு கண்காணிப்பில் இருக்கும் ஒரு விலங்கைக் கண்காணிப்பதற்கான ரேடியோ காலர். ரேடியோ டெலிமெட்ரி மூலம் புலி கண்காணிக்கப்படுகிறது, அதன் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்காக கவனிக்கப்படுகிறது. அதில் ஆண்டெனாவும் இருக்கிறது” என்றுக் குறிப்பிட்டிருந்தார்.

புலிகுட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Trending Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: