கல்யாணம் முடித்த கையோடு டிக் டாக்கில் அட்டகாசம்... வைரல் டிக் டாக் வீடியோஸ்!

வித்தியாசம் பாராமல் ஏதோ ஒரு விதத்தில் ‘டிக் டாக்’கிற்கு அடிமையாகியுள்ளனர்.

tik tok tamil : சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok). சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.

டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகா பெண்கள் டிக்டாக் வீடியோ அப்லோடிங்கில், கணிசமாக உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ், பாராட்டு கமெண்ட்டுகள் இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது.

ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒலிக்கு ஏற்ப நமது உடல் அசைவுகள் மூலம் காணொளி காட்சியாக்க உதவும் ஒரு திறன் பேசி மென்பொருள் கருவி தான் டிக் டாக் செயலி.உலகில் டிக் டாக் செயலியினை ஒரு பில்லியன் அதாவது, 100 கோடிப்பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 30 கோடிப் பேராக இருக்கலாம் என்கிறது சமீபத்தில் டிக் டாக் நிர்வாகம், இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் வீடியோக்களை பதிவிட்டுவிட்டு லைக்குகளுக்காக பரிதாபமாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் என வயது வித்தியாசம் பாராமல் ஏதோ ஒரு விதத்தில் ‘டிக் டாக்’கிற்கு அடிமையாகியுள்ளனர். இவற்றை பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும், சிலரின் வீடியோக்கள் ஆபாசமாகவும் அபாயமானதாகவும் உள்ளன.

சமீப காலமாக டிக் டாக்கில் மணமக்கள் வீடியோஸ் அதிக லைக்குஸ் மற்றும் பார்வையாளர்களை பெற்று வருகிறது. கல்யாணம் முடிந்த கையோடு மணமக்கள் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோஸ் தான் இப்போது ட்ரெண்டிங். அந்த வீடியோக்களில் சில பெஸ்டுகள் உங்கள் பார்வைக்கு..

இதுப் போல் நாஅள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் அப்லோட் செய்யப்படுகின்றன.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close