X

டிக் டாக்கில் கண்டுப்பிடிக்கப்பட்ட நடிகை மதுபாலாவின் மறுபிறவி!

டிக் டாக் வீடியோக்களைப் பதிவேற்ற, பாலிவுட் ரசிகர் கூட்டம் இவரை

tik tok tamil videos :பாலிவுட்டின் பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் தனது அழகாலும் நடிப்பாலும் அனைவரையும் தன்வசமாக்கிய மறைந்த நடிகை மதுபாலா. மும்தாஜ் பேகம் ஜெகான் தேஹலவி என்ற இயற்பெயரை பெற்ற மதுபாலா 9 வயதில் இளம் மும்தாஜ் என அறிவிக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

பாலிவுட் திரைப்படங்களின் அழகு பதுமை என புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய மதுபாலா நடிப்பில் வெளியான மஹால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, இவரின் புகழை உயர்த்தியது.71 திரைப்படங்களில் இதுவரை நடித்துள்ளார். இவருடைய முகல்-ஏ-ஆஸம் மற்றும் பர்ஸாத் கி ராத் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக விளங்கின, இந்நிலையில் 1969 தனது 36வது வயதில் உடல்நிலை குறைபாட்டால் மரணத்தை தழுவினார் மதுபாலா.

இவர் மறைந்த போதும் இவர் நடித்த படங்கள், இவரின் நடனம் ரசிகர்கள் மனதில் என்றுமே நீங்கா நினைவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் டிக் டாக் மூலம் மதுபாலாவின் மறுபிறவி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.தொலைக்காட்சி நடிகை ப்ரியங்கா கந்த்வால் தான் மதுபாலாவின் மறுபிறவின் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பார்ப்பதற்கு நடிகை மதுபாலாவை போலவே இருக்கும் ப்ரியங்கா கந்த்வால், மதுபாலாவின் பிரபல பாடல்கள், வசனங்களை வைத்து டிக் டாக் வீடியோக்களைப் பதிவேற்ற, பாலிவுட் ரசிகர் கூட்டம் இவரை இணையத்தில் வைரலாக்கிவிட்டது.

இதோ அந்த வீடியோக்கள் சிலவற்றை பாருங்கள்.



ரியல் மதுபாலா வீடியோ:

திடீரென்று டிக் டாக் மூலம் புகழின் உச்சியை பார்த்துள்ள இவர் தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் “ நடிகை மதுபாலா கண்டிப்பாக ஒரு அதிசயம். அவரோடு எந்த ஒப்பிடலும் வேண்டாம். இதெல்லாம் விளையாட்டாக நான் செய்தவையே. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Web Title:

Tik tok tamil videos tik tok tamil tik tok tamil download tik tok viral tik tok

Next
Just Now
X