New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/07/sachin-36.jpg)
Tik tok virat kholi
ஒரே நாளில் அவர்கள் ஓபாமா ஆகிவிடலாம்.
Tik tok virat kholi
Tik tok virat kholi : சோஷியல் மீடியாவில் ஏதாவது ஒரு பகிர்வு அடிக்கடி வைரல் ஆகுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சோஷியல் மீடியா ஆப் வைரலாகி வருகிறது என்றால் அது டிக்டாக்தான் (Tik Tok). சிறிய அளவிலான வீடியோக்களை ஷேர் செய்ய அறிமுகமான தளம்தான் இது. ஆனால் இன்று இளைஞர்களை, அதிலும் இளம் பெண்களை அடிமையாக்கிவிட்டது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை கிடையாது.
டிக்டாக்கில் பாடலுக்கு நடனமாடி அதை பதிவேற்றம் செய்வதில் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். தென் மாநிலங்களில் தமிழகம் மற்றும் கர்நாடகா பெண்கள் டிக்டாக் வீடியோ அப்லோடிங்கில், கணிசமாக உள்ளனர். இந்த வீடியோக்களுக்கு வரும் லைக்ஸ், பாராட்டு கமெண்ட்டுகள் இவர்களுக்கு ஒருவித போதையை ஏற்படுத்தி தொடர்ச்சியாக டிக்டாக்கில் அடிமையாக வைத்திருக்க உதவுகிறது.
இப்படி டிக் டாக் குறித்த சர்ச்சைகள் ஏகப்பட்டது பரவினாலும், சிலர் டிக் டாக் உதவினால் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். டிக் டாக்கில் இவர்கள் தரும் எக்ஸ்பிரஷன்கள், நடன அசைவுகள் அல்லது காமெடிக்கள் மக்களை அதிகம் லைக் செய்ய வைத்து விட்டால் ஒரே நாளில் அவர்கள் ஓபாமா ஆகிவிடலாம்.
அப்படி தான் டிக் டாக் மூலம் பிரபலமான இந்த நபர் இப்போது உலகத்தை கலக்கி கொண்டிருக்கிறார். இவரின் செல்லப் பெயர் விராட் கோலி டூப் என்பது தான். பார்ப்பதற்கு அச்சு அசல் விராட் கோலி போலவே தோற்றமளிக்க கூடிய இந்த நபர், டிக் டாக்கில் ட்ரெண்ட் அடித்துள்ளார். விராட் கோலியை போலவே நடப்பது, பார்ப்பது என தன்னை விராட் கோலியாக போலவே நினைத்துக் கொண்டு பல்வேறு வீடியோக்களை டிக் டாக்கில் அப்லோடு செய்து வருகிறார்.
டிக் டாக்கில் மட்டும் இவரை பின் தொடருபவர்கள் மொத்தம் 4 மில்லியன். இவரின் அனைத்து வீடியோக்களுக்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.