சும்மாவே பயங்கர அலப்பறையா இருக்கும்! இதுல டிக் டாக்ல இப்படி ஒரு அப்டேட்டா?

டிக் டாக் செயலிக்குத்தான் இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு

டிக் டாக் செயலிக்குத்தான் இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tiktok update

tiktok update

tiktok update : 24 மணி நேரமும் டிக் டாக்கில் மூழ்கி முத்தெடுத்துக்கொண்டிருக்கும் டிக் டாக்கின் அதி தீவிர ரசிகர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா? உங்களது ஃபேவரட் டிக் டாக் செயலியில் புதிய அப்டேட்டாக நூடூல்ஸ் டான்ஸ் அறிமுகமாகியுள்ளது.

Advertisment

பாத்ரூம் பாடகர்களாக இருந்த பலரை, பிரபலங்களாக மாற்றிய ஒரு ஆப். பாட்டு, டான்ஸ், வசன உச்சரிப்புகள் என டிக் டாக்கைப் பயன்படுத்தி, பலர் தங்களின் தனித் திறமைகளை உலகுக்குத் தெரியப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் 150 நாடுகளில், ஐம்பது கோடி பேர் இந்த ஆப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பிறரின் முன்னால் பேசவே தயங்கும் ஆண்களும், பெண்களும் கூட டிக் டாக்கில் பாட்டுப்பாடி, நடனமாடி, அசரவைக்கும் வசனம் பேசி பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற மற்ற சமூக வலைதளங்களை விட டிக் டாக் ஆப்புக்குத்தான் இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு.பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், இந்த ஆப்பால் ஒரு சில நன்மைகளும் நடந்தேறியிருக்கின்றன.

இப்படி டிக் டாக் செயலிக்கு ஒரு தரப்பில் இருந்து ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்தாலும் மறுபுறம் இதன் மீது எழும் விமர்சனங்கள் ஏராளம். குறிப்பாக இளைஞர்களை சீரழிப்பதாகவும், பாலியல் ரீதியான குற்றச்சாட்டும் டிக் டாக் மீது அதிகம். இப்படி நாளுக்கு நாள் டிக் டாக் குறித்த பேச்சுகள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Advertisment
Advertisements

”யார் என்ன சொன்னால்? எங்களுக்கு என்ன? எங்க்அ வேலைய நாங்க பாக்குறோம்” என்று 24 மணி நேரமும் டிக் டாக்கில் மூழ்கி கிடக்கும் கலைஞர்களுக்கு இதோ ஒரு புதிய தகவல். நூடூல்ஸ் டான்ஸ் என்ற புதிய அப்டேட் டிக் டாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாடிக் கொண்டே அல்லது ஆடிக் கொண்டே நீங்கள் நூடூல்ஸ் போல் அந்த அப்பேட்டில் மாற முடியும். சில சேம்பல்களை பார்க்கிறீர்களா?

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: