சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை பூங்கா மறுசீரமைப்பு செய்து புதிதாக அமைக்கப்பட்ட திருக்குறள் சொல்லும் மணிக் கூண்டு அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை பூங்கா மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், புதிதாக திருக்குறள் சொல்லும் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணிக்கூண்டின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு திருக்குறள் சொல்லி, அதற்கான விளக்கத்தையும் சொல்கிறது.
உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் என்று நம்பிக்கைகள் உள்ளன.
சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை பூங்காவை சீரமைப்பு செய்யப்பட்டு, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு திருக்குறள் சொல்லி அந்த திருக்குறளுக்கு விளக்கமும் சொல்லும் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான திருக்குறள் மற்றும் விளக்கம் சொல்லும் மணிக்கூண்டு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் இன்னும் பல இடங்களில் வைத்தால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“