ட்விட்டரில் ஆக்டிவாக செயல்படும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, அவ்வப்போது, திறமையாளர்களை அடையாளம் காட்டி அவர்களை ஊக்குவித்து வருகிறார்.
அப்படி, ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி அந்த திறமையாளர்களுக்கு அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தரும்.
அந்த வகையில், ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள நெல்லை சிறுவனின் வீடியோவைப் பார்த்த பலரும், ப்பா… என்னா டைவ், நல்ல பயிற்சி அளித்தால் விளையாட்டுப் போட்டிகளில் தங்கமாக அள்ளிக்கொண்டு வருவான் என்று பாராட்டி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. காமன்வெல்த் போட்டியில், இந்திய வீரர்கள், வீராங்கனைகள் திறன் குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்தியாவில் திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை அடுத்த படத்திற்கு கட்டத்திற்கு செல்ல வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் உள்ள சிறுவன் திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிவித்துள்ளார். இது போன்ற திறமையான இளைய தலைமுறையை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் இந்தியாவுக்கு அதிக தங்கம் கிடைப்பது உறுதி என்று அடுத்த தலைமுறை திறமைசாலிகளை நாம் கண்டுபிடித்து பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா சிறுவன் அசாத்தியமாக டைவ் அடிக்கும் வீடியோ குறித்து குறிப்பிடுகையில், “திருநெல்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த பையனைப் பார்த்த நண்பர் ஒருவர் இந்த வீடியோவை தனக்கு பகிர்ந்துகொண்டார். இது போன்ற திறமையான இளைய தலைமுறையை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் இந்தியாவுக்கு அதிக தங்கம் கிடைப்பது உறுதி. அடுத்த தலைமுறை திறமைசாலிகளை நாம் கண்டுபிடித்து பதக்கப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா வலியுறுத்தியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள நெல்லை சிறுவனின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்க்கிற எவரும் என்னா டைவ் என்று வாயடைத்துப் போகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“