அமெரிக்காவின் டென்னசியில் உள்ள டைட்டானிக் அருங்காட்சியகம், பிரம்மாண்டமான கப்பலின் பிரதி, ஆனால், அதன் பாதி அளவுதான் இருக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. அந்த துரதிஷ்டமான இரவில், அதில் இருந்தவர்கள் அட்லாண்டிக் பெருங்கடலின் பனிக்கட்டி நீரை எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை பார்வையாளர்களை தொட்டு உணர வைப்பதற்காக டைட்டானிக் அருங்காட்சியகம் தலைப்புச் செய்திகளை உருவாக்கியுள்ளது.
ஒரு வைரல் வீடியோவில், பார்வையாளர்கள் ஏப்ரல் 15, 1912 அன்று இரவு அட்லாண்டிக் பெருங்கடலின் அதே வெப்பநிலையில் -2 ° C (30 ° F) வரை குளிரூட்டப்பட்ட ஒரு பேசினில் தங்கள் கைகளை நனைப்பதைக் காணலாம். பல பார்வையாளர்கள் தங்கள் சகிப்புத்தன்மையை சோதித்தனர், ஆனால், பெரும்பாலானவர்களால் உறைபனி குளிர்சியை சில நொடிகள் மட்டுமே தாங்க முடிந்தது.
ஒரு எக்ஸ் பயனர் அந்த வீடியோவைப் பகிர்ந்து எழுதினார், “டைட்டானிக் அருங்காட்சியகத்தில், கப்பல் மூழ்கிய பிறகு சுற்றியுள்ள நீரில் மக்கள் நீந்த வேண்டி இருந்திருக்கும், அதே வெப்பநிலையில், நீர் நிரம்பிய இந்தப் பேசினில் நீங்கள் காணலாம். அந்த கடலின் வெப்பநிலை சுமார் 30°F இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
At the Titanic Museum you can find this basin filled with water, set to the exact temperature that the people in the surrounding waters would have had to swim in after the ship sank.
— Massimo (@Rainmaker1973) September 11, 2024
The ocean temperature was about 30°F.pic.twitter.com/38e9jjXjEh
இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன், வீடியோ பல எதிர்வினைகளைக் குவித்தது. ஒரு பயனர் கருத்து தெரிவிக்கையில், “அவை பனிப்பாறைகளைச் சுற்றி இருந்தன. அது உறைபனியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் எழுதினார், “ஆஹா, அவர்கள் இறப்பதற்கு முன்பு அல்லது மீட்கப்படுவதற்கு முன்பு அவர்கள் என்ன கஷ்டப்பட்டிருப்பார்கள், நான் மிகவும் மோசமாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“டைட்டானிக் அருங்காட்சியகத்தில், உயிர் பிழைத்தவர்கள் எதிர்கொண்டதைப் போலவே, அன்றிரவு 30 ° F தண்ணீர் எவ்வளவு குளிராக இருந்தது என்பதை நீங்கள் உண்மையில் உணரலாம். டைட்டானிக் வரலாற்றின் ஒரு பகுதியை அனுபவிக்க இது ஒரு வினோதமான, நேரடியான வழி” என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, அந்த கப்பலில் இருந்தும் அதன் பயணிகளிடமிருந்தும் நேரடியாக எடுக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.