Tamil Nadu Budget tamil memes: 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். முன்னதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறைச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல் பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
முதலமைச்சர் முக ஸ்டாலின் அரசு சார்பில் சட்டசபையில் இன்று தாக்கல் பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், அவற்றை கையில் எடுத்துள்ள நமது நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இணைய வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் மீம்ஸ்:
பெரியாரின் சிந்தனை எதிர்பார்ப்பாளர்களுக்கான மீம்ஸ்:
இன்றைய பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிதியமைச்சர் அறிவித்தார். இது தொடர்பாக பெரியார் எதிர்பார்ப்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
சிங்காரச் சென்னை 2.0 மீம்ஸ்:
இன்றைய பட்ஜெட்டில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அது குறித்தும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
ரூ.1000 உதவித்தொகை மீம்ஸ்:
இன்றை பட்ஜெட்டில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு ஏன் வழங்கவில்லை என்று கேள்வியெழுப்பும் வகையில் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
இலங்கைக்கு இந்தியா கடனுதவி மீம்ஸ்:
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கவுள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாகவும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
20,000 புத்தங்களை படித்தேன் மீம்ஸ்:
மதுரை சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். தற்போது அவர் பேசிய விஷயங்கள் பல வைரலாகி வருகின்றன. இதில் அவர், "நான் இதுவரை 20,000 புத்தகங்களைப் படித்திருக்குறேன். அவற்றில் சில புத்தகங்களைத் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அலுவலகம், வீடு என எங்கிருந்தாலும் இரண்டு புத்தகங்களை வைத்திருப்பேன்." என்று கூறியிருந்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் படு பயங்கரமாய் ட்ரோல் செய்தும் மீம்ஸ்களை பதிவிட்டும் வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.