TN Budget memes: 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க அளித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக இந்த திட்டம் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற செப்டம்பர் முதல் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை செப்டம்பர் முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு மக்களிடையே வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், தமிழக பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் இந்த அறிவிப்பு குறித்து சமூக ஊடகங்களில் தி.மு.க ஆதரவாளர்கள் ஆதரித்தும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் விமர்சித்து மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். அதே போல, நெட்டிசன்கள் கலவையாக மீம்ஸ்களை வாரி இறைத்து வருகின்றனர்.
தேர்தல் வாக்குறுதியில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதானே அறிவித்தார்கள். இப்போது என்ன தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள் என்பதைக் கலாய்த்து, அதெப்படி திமிங்கலம் அனைவருக்கும்-ங்கிறது தகுதி வாய்ந்த’வா மாறிடிச்சு என்று மீம்ஸால் வெளுத்து இருக்கிறார்கள்.
அதே போல, தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை என்றால் குடும்பத் தலைவிகளுக்குள் போட்டி ஏற்படும் என்பதை ஒரு மீம்ஸ் கிரியேட்டர் மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டுள்ளார்.
ஒரு குடும்பத் தலைவி கேட்பதாக “என்னையவிட அவளுக்கு அப்படி என்ன தகுதியிருக்கு…” என்று கேட்டு, எங்க போயி முடியபோகுதோ தெரியல என்று தனது ஆதங்கத்தை மீம்ஸ் மூலம் கொட்டியுள்ளார்.
அதே போல, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை தி.மு.க ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்ததற்கு, பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது அவர் சொன்ன ரூ.15,00,000 இன்னும் கொடுக்கவில்லையே” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மீம்ஸ்களை உங்களுக்காக இங்கே தொகுத்து தருகிறோம்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மீம்ஸ்களை உங்களுக்காக இங்கே தொகுத்து தருகிறோம்.
தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மீம்ஸ்
தமிழ்நாடு பட்ஜெட் மீம்ஸ்
தமிழ்நாடு பட்ஜெட் மீம்ஸ்
தமிழ்நாடு பட்ஜெட் மீம்ஸ்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.