சுஹாசினி – அக்ஷரா செம டான்ஸ்: கமல்ஹாசனுக்கு கடைசி நாள் ஓட்டு வேட்டை

viral news in tamil, suhasini akshara dance for kamal in TN assembly election: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சுஹாசினி மணிரத்னம் மற்றும் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் இருவரும் நடனமாடியும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பரப்புரை செய்வதற்கான நேரம் இன்று மாலை 7 மணியுடன் முடிவடைய உள்ளது. அதனால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அவர்களை ஆதரிக்கும் சினிமா பிரபலங்கள் என பலரும் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சுஹாசினி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். சுஹாசினி கமலின் அண்ணன் மகள் ஆவார். இவர் திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்துள்ளார். 80-90களில் முன்னனி நடிகையான இவர் தற்போது உலக சினிமா திருவிழாக்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

சுஹாசினி கடந்த சில நாட்களாகவே கமலுக்கு ஆதரவாக கோவையில் வாக்கு சேகரித்து வருகிறார். கடைசி நாளான இன்று அவருடன் கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷராவும் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.

அக்‌ஷரா தன் தந்தைக்காக சில நாட்களாகவே வாக்கு சேகரித்து வருகிறார். கமலின் கோவை பிரச்சாரத்தின் போது கூடவே இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கமலுக்கு காலில் ஏற்பட்ட காயத்தையும், அதனோடு தன் தந்தை பிரச்சாரம் செய்வதையும் புகைப்படமாக பதிவிட்டு, மேலும் தன் தந்தை உண்மையான போராளி என்றும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று சுஹாசினி மற்றும் அக்‌ஷரா இருவரும் நடனமாடி வாக்குகளை சேகரித்தனர்.  இவர்கள் இருவரும் ஆடிய குத்தாட்டம் அங்கிருந்த தொண்டர்களையும் பொதுமக்களையும் உற்சாகமடையச் செய்தது.

சுஹாசினி மற்றும் அக்‌ஷரா இதுவரை மேடைகளிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் நடனமாடியது இல்லை. அதுவும் இது போன்ற எனர்ஜி பொங்கும் நடனத்தை இருவரும் இதுவரை ஆடியதில்லை. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   இது கமலுக்கு வெற்றியை தருமா? தேர்தல் முடிவுகள்தான் இதற்கான பதிலைத் தரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tn elections suhasini akshara dance for kamal

Next Story
மகளுடன் ஷோக்களுக்கு வரும் அர்ச்சனா: தலைமுறையாய் தொடரும் பந்தம்anchor archana joins in bharathi kannamma raja rani, அர்ச்சனா, பாரதி கண்ணம்மா சீரியலில் அர்ச்சனா, ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா, vijay tv, bharathi kannamma, raja rani, விஜய் டிவி, பிக் பாஸ் பிரபலம் அர்ச்சனா, bigg boss celebrity archana acting in bharathi kannamma serial, vijay tv, raja rani serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com