New Update
/
நோய்வாய்ப்பட்ட யானைக்கும் மற்றும் அதன் குட்டிக்கும் சிகிச்சை அளிக்கும் தமிழக வனத்துறை ஊழியர்களின் கடின உழைப்பு குறித்த பதிவை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இந்த நெகிழ்ச்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறை ஊழியர்கள் உடல் நலம் குன்றிய பெண் யானைக்கு பாலூட்டி நலம் பெறச் செய்து வருகின்றனர். தமிழக வனத்துறை ஊழியர்களின் இந்த கருணை மிக்க முயற்சியை ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
A very difficult time for the Forest Team at the Satyamangalam Tiger Reserve as they are putting their best efforts to treat a very unwell female elephant. Her two months old baby is being taken care by a team of experienced Veterinarians. pic.twitter.com/6IbQ1NSbx4
— Supriya Sahu IAS (@supriyasahuias) March 4, 2024
நோய்வாய்ப்பட்ட யானையின் போராட்டத்தை பதிவு செய்துள்ள வீடியோ மற்றும் புகைப்படம் அடங்கிய பதிவில் உள்ள வீடியோவில், கம்பீரமான யானை தானாக எழுந்து நிற்க முடியாமல் தரையில் படுத்துக் கிடக்கிறது. வனத்துறை ஊழியர்கள், அதற்கு மிகவும் இரக்கத்துடன் சிகிச்சை அளிக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு படுத்துக் கிடக்கும் யானைக்கு வனத்துறை ஊழியர் ஒருவர் குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கிறார். இது நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் யானை நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது.
இந்த சமபவம் குறித்து தமிழக அரசின் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹு பதிவிட்டிருருப்பதாவது: “சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனக் குழுவினர், உடல்நிலை சரியில்லாத பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதில் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், இது அவர்களுக்கு மிகவும் கடினமான நேரம். அந்த யானையின் இரண்டு மாத குட்டியை அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் குழு கவனித்து வருகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்து அதை மீட்க போராடும் வனத்துறை ஊழியர்களின் முயற்சியை வெளிப்படுத்தும் இந்த சம்பவம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குறிப்பாக தேவைப்படும் நேரங்களில் மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே உருவாகும் ஆழமான பிணைப்பையும் வெளிப்படுத்துகிறது.
ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இந்த நெகிழ்ச்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் யானை விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.