scorecardresearch

வேற யாரு? அணில் தான் காரணம்… இணையத்தில் வைரலாகும் ‘பவர் கட் பரிதாபங்கள்’ மீம்ஸ்!

Social media trending and viral Tamilnadu Power cut tamil memes: தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

TN power cut Parithabangal tamil memes

Tamilnadu Power cut tamil memes: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

‘பவர் கட் பரிதாபங்கள்’ மீம்ஸ்:

தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. இதனால், மாநிலத்தில் மீண்டும் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கியுள்ளது என மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ள இணையவாசிகள் ஆளும் திமுக அரசு மற்றும் மின்வெட்டு பிரச்சனை குறித்தும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இணைய வாசிகள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் மீம்ஸ்:

ஐ.பி.எல்லில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணி 8 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்திப்பது இது முறையாகும். மேலும், மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாகும்.

இந்த சீசனில் மும்பை அணி அதன் முதல் போட்டியில் டெல்லியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 2வது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. 3வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும். நான்காவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் தோற்றது மும்பை.

5வது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியும், 6வது போட்டியில் லக்னோ அணியும் மும்பையை வீழ்த்தின. 7வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்ற மும்பை அணி, நேற்று நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான 8வது போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இப்படியாக மும்பை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து இருப்பதால், அந்த அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த தொடர் தோல்விகளால், மும்பை அணி வீரர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், மும்பை ரசிகர்களும் வருத்தமடைந்துள்ளனர். அந்த அணி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் கூட, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது சாத்தியமற்ற நிலையில் உள்ளது.

இதேபோல், 4 முறை சாம்பியனான சென்னை அணி நடந்த 8 ஆட்டங்களில் 6ல் தோல்வி 2ல் வெற்றி என பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்னும் ஒரு ஆட்டத்தில் தோல்வி அடையும் பட்சத்தில் பிளே-ஆப் கனவு தகர்ந்துவிடும். இதற்கிடையில் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சுவையான மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் நிலையில், இணைய வாசிகள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வரும் ‘ஐபிஎல்’ தொடர்பான மீம்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tn power cut parithabangal tamil memes

Best of Express