TN renames cities, towns and districts Netizens find funny to pronounce veeloor, Koyampuththoor : தமிழக மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை தமிழில் எழுதுவது போன்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என புதிய பட்டியலை நேற்று வெளியிட்டது தமிழக அரசு.
இது போன்று இன்னும் நெறைய பெயர் மாற்ற ரியாக்சன்களை ஆங்கிலத்தில் படிக்க
தமிழில் சைதாப்பேட்டை என்றால் ஆங்கிலத்தில் சைதாபேட் என்று இருக்கும். டாஞ்சூர் என்றால் தஞ்சாவூர், டூட்டுக்கொரின் என்றால் தூத்துக்குடி. நமக்கே இதை எழுதும் போது கொஞ்சம் கொயப்பமா தான் இருக்கு. அச்சோ. இல்லங்க கொஞ்சம் குழப்பாம இருக்குதுனு சொல்ல வந்தேன்.
???? To #Eps #KOYAMPUTHTHOOR #Veeloor #NAMECHANGE pic.twitter.com/Scf7CEkCIG
— ஜெனோ ???????????? (@jeno3107) June 11, 2020
மீம் கிரியேட்டர்கள் ரொம்ப நாட்களாக கண்டெண்ட் ஏதும் கிடைக்காமல் கொரோனாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்கள். பின்பு 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது சில மணி நேரங்கள் கண்டெண்ட்டாக்கப்பட்டது. தற்போது இந்த பெயர் மாற்றம் தான் ட்பா ட்ரெண்டிங்.
???? பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல... (நல்ல வேளை சைத்தான் பேட்டைனு வைக்கலை) pic.twitter.com/073DebFw9V
— Mohamed Imranullah S (@imranhindu) June 11, 2020
கோயம்புத்தூர் பேருக்கு இது கொஞ்சம் சோதனையான காலம்னு மனச தேத்திக்கலாம். ஆனா வேலூர்க்கு ஒரு ஸ்பெல்லிங்க் கொடுத்துருக்காங்களே! யெப்பா... வீலூர் (veeloor).. நாள பின்ன பஸ்ல, ட்ரெய்ன்ல எந்த ஊருக்கு போறீங்கன்னு கேட்டா எப்டி சொல்றதுனு வீலூர் காரங்க குழம்ப போறாங்க.
#KOYAMPUTHTHOOR #NAMECHANGE pic.twitter.com/b76DmWR7R5
— Kaliranjith (@kaliranjith) June 11, 2020
சென்னையில் இருக்கும் பல்வேறு பகுதிகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, மயிலாப்பூர், சிந்தாதரிபேட்டை, அம்பத்தூர் பகுதிகளின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.
So next time if someone asks me where I am from? #koyampuththoor ❤️❤️❤️#TamilNames #TamilNadu #TNGovernment pic.twitter.com/Upy5FjKrgM
— Sastika Rajendran (@Sastika_R) June 10, 2020
#veeloor #koyampuththoor mudiyala pic.twitter.com/GgUteNfQuT
— Suresh-EAV (@SureshEav) June 10, 2020
அட அந்த கொரோனாவே குழம்பி போய்டுங்க. எந்த எரியால போய் யார அட்டாக் பண்றதுனு தெரியாம முழிக்கனும்னு தான் இப்டி ஒரு ஐடியா... சூப்பர்ல!
#Koyampuththoor Proud to be in Kovai... pic.twitter.com/jrAhCtMVBv
— Kongu Tamizhan கொங்குத்தமிழன் (@iamtvk) June 11, 2020
ஆனா இதுக்கெல்லாம் காரணகர்த்தா உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். ஏன்னு கேட்டா அவரு தான் இதுக்கு முன்னாடி உ.பி. ல இருந்த பிரபலமான நகர்களுக்கெல்லாம் பெயர்களை மாற்றினார்.
Coronaz got confusedz wherez to goz? Why not change tamil Nadu to tamizh Nadu ???? #NAMECHANGE pic.twitter.com/bxDmZQ36S6
— Anju Kulkarni (@Anju01__) June 11, 2020
இப்டியெல்லாம் நாங்க சொல்லலைங்க.. எல்லாம் நம்ம நெட்டிசன்களும் மீம் கிரேயேட்டர்களும் தான். அவங்க எல்லாத்தையும் விடுங்க. இந்த பெயர் மாற்றங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.