TNPSC Group 2 exam results memes: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில், இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.
இந்த குரூப் 2 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதமே முடிய உள்ள நிலையில், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், முதன்மைத் தேர்வை நோக்கி எதிர்ப்பார்த்து இருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு காரணமாக, தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், குரூப் 2 தேர்வு ரிசல்ட் தாமதமாகி வருவது குறித்து, சிலர் இணையத்தில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சிலர் வடிவேலுவின் பேமஸ் டயலாக் ஆன வரும்… ஆனா வராது என்ற நகைச்சுவை வீடியோவை ஒப்பிட்டு மீம்ஸ் போட்டு வருகின்றனர்.