டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: ரமணிக்கும் ராமநாதனுக்கும் என்ன உறவு? குழம்பிப்போன தேர்வர்கள்!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்கச் செய்துள்ளது. அந்த கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்கச் செய்துள்ளது. அந்த கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
tnpsc exam free camp,TNPSC Group I Exam free Class, District Employment office

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்கச் செய்துள்ளது.

Listen to this article
00:00 / 00:00

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்கச் செய்துள்ளது. அந்த கேள்வி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டில் அரசுப் பணிகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்கிற டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. 

அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளுக்கு தயாராகி தேர்வு எழுதுகிறார்கள். 

இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 28ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் வி.ஏ.ஓ, வனக் காவலர், பில் கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், கூட்டுறவுச் சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் , இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் என மொத்தம் 6,244 காலியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

இந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்கச் செய்துள்ளது. இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.

தேர்வர்களை குழப்பத்தில் ஆழ்த்தி மலைக்க செய்த அந்த கேள்வி என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாக இருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அந்த கேள்வி.

group 4 ques

ரமீலா கூறுகையில், " “எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை".. ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமாநாதனுக்கு என்ன உறவு? என்பதே அந்த கேள்வி. 

இதற்கு 5 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.. மனைவி, சகோதரி, மகள், பேத்தி மற்றும் விடை தெரியவில்லை என்று 5 ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேள்வி இணையத்திலும் சமூக வலைதளத்திலும் வைரலாகி வருகிறது. இந்த கேள்விக்கு என்ன பதிலாக இருக்கும் என்பது குறித்து நெட்டிசன்கள் நகைச்சுவையாகவும் கம்மெண்ட் செய்து வருகிறார்கள். ரமணிக்கும் ராமநாதனுக்கும் என்ன உறவு நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: