கோயம்பேடு பேருந்து நிலையில், வசூல் தொகை குறைவாக இருப்பதாகக் கூறி நடத்துனரை உதவி மேலாளர் தாக்கியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்: வீடியோ: குட்டியை தாக்க வந்த முதலை… பாய்ந்து சென்று பஞ்ச் விட்ட தாய் யானை!
சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்ட உதவி மேலாளர் வசூல் தொகை குறைவாக இருப்பதாக கூறி நடத்துனரின் கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், என்னை ஏன் அடிக்க வருகிறீர்கள் என உதவி மேலாளரிடம் நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்னை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு, அந்த உரிமையை கொடுத்தது யார் என்று நடத்துனர் கோபமாக கேட்கிறார்.
இந்தநிலையில், உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil