Advertisment

சத்துணவு சாப்பிடுவதற்கு வெட்கப்பட வேண்டாம்... மாணவர்களுக்கு நேரில் புரிய வைத்த கலெக்டர்!

மதிய நேரம் என்பதால் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சத்துணவு சாப்பிடுவதற்கு  ஓடி வந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சத்துணவு சாப்பிடுவதற்கு வெட்கப்பட வேண்டாம்... மாணவர்களுக்கு நேரில் புரிய வைத்த  கலெக்டர்!

கேரளா மாநில கலெக்டர்  சுஹாஸ், அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து  சத்துணவு சாப்பிட்ட  செயல் பாராட்டுக்களை  அள்ளி வருகிறது.

Advertisment

கடந்த சில நாட்களாக இந்திய அளவில் பேசப்பட்டு வந்த ஒரு சம்பவம் என்னவென்றால் அது ஆசிரியர் பகவானின் பணியிடை மாற்றம் தான்.   திருவள்ளூர் அரசு பள்ளி  ஆசிரியரான பகவானை  பணியிடை  மாற்றம் செய்ய கூடாது என்று  அவரின் பள்ளி மாணவர்கள் அனைவரும்  கதறி அழுத சம்பவம்  ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. தேசி ஊடகங்களிலும்  ஆசிரியர் பகவான் குறித்த செய்திகள் வெளியாகி பலரையும் கலங்க வைத்தன.

இந்த ஒரு சம்பவமே நெஞ்சை விட்டு அகலாத நிலையில், கேரளாவில் மாவட்ட கலெக்டர்  சுஹாஸ் அரசு பள்ளி மாணவர்களுடன்  சேர்ந்து சத்துணவு சாப்பிட்ட  செயல், மற்றொரு நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்துள்ளது.  ஆலப்புழா மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் அரசு பள்ளிக்கு,  அம்மாவட்ட கலெக்டர்  சுஹாஸ்  திடீரென்று விசிட் அடித்தார்.  அவர் சென்றது மதிய நேரம் என்பதால் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சத்துணவு சாப்பிடுவதற்கு  ஓடி வந்துள்ளனர்.

அங்கு நின்றுக் கொண்டிருந்த கலெக்டரை பார்த்த அந்த மாணவர்கள் தயக்கத்துடன் சத்துணவு அறையை எட்டி எட்டி பார்த்துள்ளனர். இதை கவனித்த கலெக்டர்  சுஹாஸ் , அந்த மாணவர்களிடம் “நானும் சத்துணவு சாப்பிட்ட தான் வந்துள்ளேன் .. வாருங்கள்” என்று அழைத்தப்படி அந்த மாணவர்களுடன் சேர்ந்து வரிசையில்  உணவு அருந்தினார்.  அன்றைய தினம் சத்துணவில் பரிமாறப்பட்ட சாதம், வெள்ளரிக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு பொறியல், மோர் என அனைத்தையும் சாப்பிட்டு பார்த்த கலெக்டர் ,மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.

அப்போது பள்ளியில் சத்துணவு சாப்பிட்டுவதற்கு எந்த வகையிலும் வெட்கப்பட வேண்டாம் என்றும்,  இது உங்களுக்காக வழங்கப்படும் உணவு என்றும் கூறியுள்ளார்.  மேலும், கூடிய விரைவில் அந்த பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.  கூடவே, சத்துணவு ஆசிரியர்களை அழைத்து பேசிய அவர், மாணவர்களுக்கு  கட்டாயம் இதுப்போன்ற தரமான உணவுகளையே தினமும் அளிக்க வேண்டும் என்றும்,  உணவின் தரத்தை சோதிப்பதற்காக இன்று பள்ளிக்கு வருகை தந்ததாகவும் கூறினார். கலெக்டரின் இந்த செயலை பார்த்த ஆசிரியர்கள் வாயடைத்து நின்றனர்.

மாணவர்களுடன் சரிசமாக அமர்ந்து, கலெக்டர் சுஹாஸ் சத்துணவு சாப்பிட்ட செயல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.  இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும்  நெட்டிசன்கள் பலரும் கலெக்டரின் செயலை மனதார பாராட்டி வருகின்றனர்.

 

Social Media Viral Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment