ஜப்பான் நகர் டோக்கியோவில் காலை உணவு உண்ணாமல் வேலைக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோவில் இலவச நூடுல்ஸ் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சி அடைந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஜப்பான் எப்போதுமே மற்ற நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவே திகழ்ந்து வருகிறது. இதற்கு பல காரணங்களை கூறலாம். அவர்களின் உழைப்பில் தொடங்கி அவர்களின் வளர்ச்சி அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தும் ஒன்று தான்.
அந்த வகையில் ஜப்பான் மெட்ரோ நிர்வாகம், பயணிகளுக்கு மிகச் சிறந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரில் செயல்படும் மெட்ரோ ரயிலில் காலை நேரத்தில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக நூடுல்ஸ் மற்றும் காலை உணவு வழங்கப்படுகிறது.
டோக்கியோ நகரில் இயங்கி வரும் மெட்ரோ தினமும் பரபரப்பாக காணப்படும் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோவில் தினமும் காலை ஆயிரக்கணக்கானோர் வேலைக்கு, பணியிடங்களுக்கு செல்வார்கள். அவர்களில் எத்தனை பேர் காலை உணவை தவிர்த்து விட்டு செல்வார்கள் என்று தெரியவில்லை.
இவர்கள் அனைவருக்கு காலையில் இலவசமாக நூடுல்ஸ் வழங்கினால் என்ன செய்வார்கள்? நோ சொல்லாம வாங்கி சாப்பிடுவார்கள் அதானே.அதேதான். டோக்கியா மெட்ரோ நிர்வாகம் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதே சமயம் இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம் என்ற திட்டமும் அவர்களிடம் இருக்கிறது.
இதன் படி மெட்ரோவில் வார நாட்களில் காலையில் நேரத்தில் பயணிக்கும்போது பயணிகள் இலவசமாக நூடுல்ஸ் வாங்கிக்கொள்ளலாம். இந்த இலவச நூடுலஸ் பெற டோக்கியோ மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ள காலை நேர பயணத் திட்டத்தில் இணைய வேண்டும். அதற்கு இலவசமாக அளிக்கப்படும் டோக்கன் மூலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள உணவு விற்பனை மையங்களில் இலவசமாக நூடுல்ஸ் வாங்கலாம்.
இந்த இலவசம் டொசாய் வழித்தடத்தில் இயங்கும் சுரங்க மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களுக்குத்தான் பொருந்தும். இந்த சிறப்பு காலை உணவு சலுகை ஜனவரி 21 முதல் பிப்ரவரி 1 முதல் மட்டுமே. இதற்கான அறிவிப்பு டோக்கியோ மெட்ரோ நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
みんなでおそばをゲットしよう!時差Biz期間中、東西線早起きキャンペーンに6,886人(1月22日現在)のお客様に、継続的にご参加いただいています!現在のところ、時差Biz期間全日ご参加いただいたお客様に、めとろ庵で使用できる「かきあげそば引換券」をプレゼント!明日もキャンペーンに参加しよう! pic.twitter.com/dAIZiwih00
— 東京メトロ【公式】 (@tokyometro_info) 23 January 2019
இந்த ஸ்பெஷல் திட்டத்தில் எத்தனை பேர் கலந்துக் கொள்வார்கள் என மெட்ரோ நிர்வாகம் ஒரு தனி கணக்கை வகுத்து வைத்துள்ளது. பொதுவாகவே காலை உணவை தவிர்ப்பது என்பது மிகவும் தவறான பழக்கங்களில் ஒன்று. இதை மருத்துவர்கள் பலமுறை பலவிதங்களில் கூறுவார்கள்.
ஆனால் டோக்கியோ மெட்ரோ நிர்வாகம் கையில் எடுத்திருக்கும் இந்த முயற்சி பயணிகளிடம் இருந்து வெகுவாக பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்த வகையிலாவது பயணிகள் காலை உணவை தவறாமல் உண்ணும் பழகத்தை கடைப்பிடிப்பார்கள் என நம்ப படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.