New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/09/DSC02610-32.jpg)
facebook viral
திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி ஆகி உடனே மேடைக்கு ஓடி வந்து
facebook viral
facebook viral : திருமணம்.. ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆண் - பெண் இருவரின் வாழ்க்கையிலும் இந்த திருமண தருணம் மறக்க முடியாத ஒன்று. சந்தோஷம், அளவுக்கடந்த மகிழ்ச்சி, நண்பர்களின் கலாட்டா என திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான்.
இந்த வீடியோவில் வரும் மணமக்களும் அப்படி தான் தங்களது வாழ்நாளில் தங்களுடைய திருமண நாளை கண்டிப்பாக மறக்கவே முடியாது. ஓட்டு மொத்த ஊரும் வீடியோவை பார்த்து விட்டார்கள். இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதை பார்க்க பார்க்க அவர்களுக்கு தினம் தினம் அந்த தருணம் மறக்காது.
மேற்கு வங்கத்தில் நடைப்பெற்ற இந்து திருமணம் ஒன்றில், கல்யாணம் முடிந்தவுடன் மணமகன் மணபெண்ணை தூக்க வேண்டும் என்பது சடங்கு. அப்படி முயற்சிக்கும் போது தாப் இந்த விபரீதமே நடந்தது.
மாப்பிள்ளை புதுபெண்ணை பின்னால் இருந்து தூக்க முயற்சித்து அவரால் முடியாமல் போக அப்படியே குப்பற கீழே விழுகிறார். மணமகளையும் போட்டு விடுகிறார். அவ்வளவுதான் திருமணத்திற்கு வந்த அனைவரும் அதிர்ச்சி ஆகி உடனே மேடைக்கு ஓடி வந்து இருவரையும் தூக்குகிறார்கள். நல்ல வேலை இருவருக்கும் எந்த அடியும் படவில்லை.
இந்த நிகழ்வு திருமண மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.