அறுபது ஆயிடுச்சு மணி விழா முடிஞ்சிடுச்சு ஆனாலும் இவங்க லவ் ஜோடி தான்..இணையத்தை கலக்கும் வீடியோ!

இந்த ஜோடியை பார்க்க பொறாமையாக தான் இருக்கு.

By: Updated: March 28, 2019, 11:14:52 AM

today internet viral : காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு அது.

உண்மையான காதலுக்கு நிரூபணம் எதுவும் தேவையில்லை. அதே போல் உண்மையான காதலுக்கு வயது ஒரு தடையும் இல்லை.இந்த விஷ்யத்தில் பஞ்சாபில் உள்ள இந்த காதல் ஜோடிகள், இளம் காதலர்களையே தோற்கடித்து விடுவார்கள்.

மனைவியின் கையை பிடித்து ரசித்து ஆடும் காதலன், அவருக்கு ஈடுக்கொடுத்து விடாமல் ஆடும் காதலி. இவர்களின் வயது என்ன தெரியுமா? 70 வதையும் தாண்டி. ஆனால் தோற்றத்திலும் அப்படி தெரியாது ஆட்டத்திலும் அப்படி தெரியாது. சில மாதங்களுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் இவர்கள் ஆடிய நடனம் இணையத்தையே ஒரு வலம் வந்தது. இந்த ஜோடிக்கு அவ்வளவு ஃபேன்ஸ் பட்டாளம் உருவானர்கள்.

இந்நிலையில், இவர்களின் மற்றொரு வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கொஞ்சம் கூட இவர்களில் முகத்தில் சளிப்பு இல்லை. அதே துள்ளல். அதே இளமை. அதே காதல், உண்மையாகவே இந்த ஜோடியை பார்க்க பொறாமையாக தான் இருக்கு.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Today internet viral favourite couple is back with yet another dance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X