Advertisment

ஒரு காலத்துல கர்நாடகாவுல சிங்கமா இருந்தவரு… ஆனால் இப்போ… நெட்டிசன்கள் வீசும் மீம்ஸ் ஏவுகணைகள்

இசையே என்று இருந்த இசைஞாணி இளையராஜா பிரதமர் மோடி பற்றிய புத்தகத்துக்கு முன்னுரையில், அவர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுத சமூக ஊடகம் 3-4 நாளாக போர்க்களமாகியுள்ளது. எல்லா தரப்பு நெட்டிசன்களும் தாருமாறாக மீம்ஸ் ஏவுக்கணைகளை வீசி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
annamalai, tamilnadu political memes, bjp, yuvan shankar raja, ilaiyaraja, கறுப்பு திராவிடன், கருப்பு திராவிடன், சீமான், யுவன் ஷங்கர் ராஜா, மோடி, இளையராஜா, கருப்பு திராவிடன், தமிழன், seeman, memes, political memes, black dravidians

இன்றைக்கு சமூக ஊடகங்கள் அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான வெளியாக மாறியுள்ளது. வீட்டு பிரச்னை முதல், ஊர் பிரச்னை வரை, நாட்டு பிரச்னை முதல் உலகப் பிரச்னை வரை அனைத்திலும் தனிமனிதனாக அவரவர் கருத்து தெரிவிக்கும் களமாக சமூக ஊடகங்கள் அமைந்துள்ளது. அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு சாமானியர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, பிரபலங்கள் முதல் அறிவுஜீவிகள் வரை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisment

சமூக ஊடகப் பயனர்கள், அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், சினிமா, அரசியல், சமூகம், கல்வி என எல்லாவற்றையும் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். பலரும் எழுத்துப் பதிவுகள், வீடியோக்களைவிட மீம்ஸ்களை வெளியிட்டு நகைச்சுவையாகவும் மற்றவர்களை கவனிக்கும் படியாகவும் பதிவிடுவதை விரும்புகின்றனர். பல இணைய ஊடகங்கள் மீம்ஸ்களை உருவாக்குபவர்களை வேலைக்கு எடுக்கிறது.

சமூக ஊடகங்களில் அதிக அளவு மீம்ஸ்களை பகிர்வதில் மற்ற எந்த மாநிலங்களை விடவும் மற்ற எந்த மாநில மொழிகளை விடவும் மீம்ஸ்கள் அதிகமாக பகிர்வது தமிழ்நாடும் தமிழ் மொழியிலும்தான் என்று உறுதியாக சொல்லும்.

இசையே என்று சும்மா இருந்த இசைஞாணி இளையராஜாவிடம் பிரதமர் மோடி பற்றிய புத்தகத்துக்கு முன்னுரை கேட்டு வெளியிட, அதில், அவர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு எழுத சமூக ஊடகம் 3-4 நாளாக பற்றி எரிகிறது.

மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டதற்காக கடுமையாக விமர்சித்தவர்களுக்கு பதிலுக்கு இளையராஜா எனது கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கூறியதாக கங்கை அமரன் பதிலடி கொடுத்தார்.

இதனிடையே, இளையராஜாவின் இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா, நான் கறுப்பு தமிழன், கறுப்பு திராவிடன் என்பதில் பெருமைகொள்கிறேன் என்று பதிவிட எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல சர்ச்சை கொழுந்துவிட்டு எரிகிறது.

இது போதாத குறைக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, யுவன்ஷங்கர் ராஜா கறுப்பு என்றால், நான் அண்டங்காக்கா கறுப்பு, நானும் கறுப்பு தமிழன், கறுப்பு திராவிடன் என்று கூற என்ன தலைவரே இது புதுசா இருக்கிறதே என்று நெட்டிசன்கள் மீம்ஸ்களுடன் களம் இறங்கிவிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து ஊடகங்கள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கருத்து கேட்க, மோடி பற்றிய கருத்து இளையராஜாவின் தனிப்பட்ட கருத்து. யுவன் சின்னபிள்ளை விவரம் தெரியாமல் சொல்லியிருகிறார். ஒன்னு திராவிடன்னு சொல்லு, இல்லை தமிழன்னு சொல்லு என்று அறிவுரை கூறினார். அதோடு, கறுப்பா இருக்கிற எல்லாம் திராவிடர்னா எருமை மாடுகூடத்தான் கறுப்பா இருக்கிறது. எருமை மாடு திராவிடரா? என்று கேட்டு அவருடைய தீவிர தமிழ்த்தேசிய கருத்தை சொல்ல ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் ஒரே போர்க்களமாகிவிட்டது. எல்லாத் தரப்பிலும் நெட்டிசன்கள் மீம்ஸ் ஏவுகணைகளை தாறுமாறாக வீசி வருகின்றனர்.

அதனால், சமூக ஊடகம் எனும் யுத்த களத்தில் இருந்து ரொம்ப இளையராஜா கருத்தையொட்டி பகிரப்படும் சில மீம்ஸ்களை தொகுத்து இங்கே பகிர்ந்துகொள்கிறோம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Annamalai Seeman Yuvan Shankar Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment