/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-nadu-1.jpg)
சமூக ஊடகங்களின் காலத்தில் உலகத்தில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டு உடனுக்குடன் எதிர்வினைகளும் செய்யப்படுகிறது. அரசியல் துறைக்கு சமூக ஊடகங்கள் ஒரு பெரிய ஆயுதமாகவும் களமாகவும் கிடைத்துள்ளது. சமூக ஊடகங்களுக்குள் நுழைந்தால் சில நேரங்களில் பதற்றமாகி விடுகிறது. அந்த அளவுக்கு போர்க்களம் போல தோற்றமளிக்கிறது. சமூக ஊடகத்தைவிட்டு வெளியே வந்தால், என்ன உலகம் இவ்வளவு அமைதியாக இருக்கிறது நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.
அரசியலில் எதிர்தரப்பு கருத்துகளை விமர்சித்து நையாண்டி செய்ய மீம்ஸ்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மீம்ஸ்கள் அன்றாட அரசியலை கிண்டல் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அரசியல் மீம்ஸ்களை உருவாக்க நகைச்சுவை உணர்வு மட்டும் போதாது, அரசியல் அறிவும் தேவையானது. அப்படியான மீம்ஸ் கிரியேட்டர்கள், தினம் ஒரு மீம்ஸ் போட்டு அரசியல் களத்தை போர்க்களமாகி களங்கடிக்கிறார்கள்.
அந்த வகையில், தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. ஆனால், பாஜக, அதிமுக, தமாகா கலந்துகொண்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes-3-1.jpg)
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் ஆகால தாமதம் செய்வதால், தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளாது என்று அறிவித்தது. இதற்கு, கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை தேநீர் விருந்துக்கு வராததால் டீ செலவு மிச்சம் என்று கூற திமுக மற்றும் அதன் ஆதரவாளர்கள் மீம்ஸ்களை சமூக ஊடகங்களில் தெரிக்கவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/memes-2-1.jpg)
ஒரு ட்விட்டர் பயனர், பாஜக அண்ணாமலையின் கருத்துக்கு விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் ஊடக விவாதத்தில் கூறிய கருத்தும் மீம்ஸாகி உள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதால் செலவு மிச்சமாகும் - அண்ணாமலை
பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் செலவும் எங்களுக்கு மிச்சம் - ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ
இதற்கு மீம்ஸ் கிரியேட்டர் நடிகர் மணிவண்ணனின் புகைப்படத்தைப் போட்டு “அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லயே... தரமான பதிலடி...” என்று கிண்டல் செய்துள்ளார். இப்படியாக, இன்று சமூக ஊடகங்களை கலக்கிய அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
#🤭அரசியல் மீம்ஸ் #📰தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #👨மோடி அரசாங்கம் #🧑 தி.மு.க
— Muthukumar Mkr (@MkrMuthukumar) April 15, 2022
மனுசன் செஞ்சிட்டாரு👌🔥🔥https://t.co/0HpYVgOjso
ஷேர்சாட்டை பதிவிறக்கம் செய்து 1 லட்சம் வரை வெல்லுங்கள் https://t.co/1fts1jZImc pic.twitter.com/WdZrC9n9zh
#🚨கற்றது அரசியல் ✌️ #😂வடிவேலு மீம்ஸ் #🤭அரசியல் மீம்ஸ் #😊சிரிப்பும் சிந்தனையும்🤔 #😂 கலக்கல் காமெடிhttps://t.co/sgvHs9Lbwf
— S. Gunasekaran (@SGunase17508808) April 15, 2022
ஷேர்சாட்டை பதிவிறக்கம் செய்து 1 லட்சம் வரை வெல்லுங்கள் https://t.co/cGZLWERECd pic.twitter.com/Cn7iyhURZM
#🚨கற்றது அரசியல் ✌️ #🤔 Unknown Factshttps://t.co/WSGJQOaSQK
— S. Gunasekaran (@SGunase17508808) April 15, 2022
ஷேர்சாட்டை பதிவிறக்கம் செய்து 1 லட்சம் வரை வெல்லுங்கள் https://t.co/cGZLWERECd pic.twitter.com/HXllprIFgQ
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.