இன்றைய நாள் ட்விட்டர் வலைப்பக்கத்தில் தமிழ்நாடு கெத்து காட்டி மிரட்டியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கடைகள் அடைப்பு, பேருந்துகள் நிறுத்தம், தீக்குளிப்பு முயற்சி, திமுக தலைவர் ஸ்டாலின் கைது என அடுத்தடுத்து நடந்த பல அதிர்வுகளால் தமிழ்நாடு பந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆங்கில ஊடகங்களும் தமிழ்நாடு பந்த குறித்து செய்தி வெளியிட்டன. ஒரு பக்கம் காமன்வெல்த் 2018-ல் இந்திய வீரர்கள் தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தன.
மறு பக்கம், சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை, நீரவ் மோடி வழக்கு என ட்விட்டர் வலைப்பக்கம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்துக் கொண்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. தமிழகத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
ஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்திய வீரர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். 21 வது காமன்வெல்த் போட்டிகள், கலைநிகழ்ச்சிகளுடன் ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
Action underway. Can India touch 100 medals? That’s what should be the set target. @Pvsindhu1 will remember this moment forever. pic.twitter.com/PZD92QH2Y5
அரியவகை மான்களை வேட்டையாடியதாக சல்மான் கான் மற்றும் நான்கு பேர் மீதான வழக்கில் இன்று ராஜஸ்தான் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், இரண்டு மான்கள்ளை வேட்டையாடிய சல்மான்கானிற்கு 5 ஆண்டுக சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சைஃப் அலி கான், சொனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் கொதாரி ஆகிய நான்கு பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அழுத்தம் கொடுக்காத மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று எதிர்கட்சியினர் நடத்திய பந்த், மறியல் காரணமாக சென்னை ஸ்தம்பித்தது. மாநிலம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் மிகக்குறைவாகவே இயக்கப்படுகின்றன. இதனால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் நுழைய முற்பட்டபோது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஸ்டாலினுடன் கூட்டணி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். திமுகவினரின் இந்த போராட்டத்திற்கு வணிகர் சங்கத்தினரும் முழு ஆதரவு அளித்திருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும் மாநில அதிமுக அரசையும் கண்டித்து அனைத்து எதிர்கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போது. #CauveryMangementBoard#TNBandhpic.twitter.com/0bdVUVYfoW
— Su.Thirunavukkarasar (@ThiruArasarINC) April 5, 2018
5. #Gururaja
காமல்வெல்த் போட்டிகள் இன்று காலை முதல் துவங்கியது. இதில் பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் குருராஜா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இவர் வெள்ளி பதக்கம் வென்றார்