ஐபிஎல் வேண்டாம்!!!!! ட்விட்டரில் ட்ரெண்டான #NoIPLTamilNadu

சிம்ரனின் பிறந்த நாள், சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணமும் இன்றைய நாளில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரமாக ட்விட்டரில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த ஸ்டெர்லைட் போராட்டத்தையும் தாண்டி ஒரு மிக முக்கியமான விவாதம் இன்றைய நாளில் ட்விட்டர் வலைப்பகத்தில் ரெண்டாகியுள்ளது.

காவிரி விவகாரத்திற்கு இப்போது தீர்வு இல்லை என்று மத்திய அரசு, பகீரங்கமாக வெளிப்படுத்திய போது, தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு காவிரி பெற்று தருவதில் அதி தீவிரமாக போராடி வருகின்றன. அதன் ஒரு பங்காக தான் தமிழ்நாட்டிற்கு ஐபிஎல் வேண்டாம் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதனைத்தொடர்து, சிம்ரனின் பிறந்த நாள், சந்திரபாபு நாயுடுவின் டெல்லி பயணமும் இன்றைய நாளில் ட்ரெண்டாகியுள்ளது.

.

1.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு வரும் 9ஆம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது.இந்நிலையில் தமிழக மக்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2. 

தமிழகத்திற்கு காவிரி கிடைக்க வேண்டும் என்றால், ஐபிஎல் போட்டியை புறகணிக்க வேண்டும் என்றும்  புதிய கணிப்புகள் கிளம்பியுள்ளன. மேலும், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்,  ஐபிஎல் நிர்வாகம், தமிழக அரசு, காவல்துறை ஆகியோர் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆதரவு தரக்கூடாது என்று கோரிக்கை விடுத்தார்.மீறி கிரிக்கெட் போட்டி நடத்தினால் தங்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் டிக்கெட் பெற்று மைதானத்துக்குள் சென்று போராட்டம் நடத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

3. #HappyBirthdaySimran

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இன்று தனது 42 ஆவது பிறந்த நாள்ளை கொண்டாடினார்.  இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பிறகு ஒரு இடைவெளிவிட்டு சிம்ரன் மீண்டும் சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என நடித்தார்! அத்துடன் இப்போது அவர் சொந்தமாக ‘சிமரன் அன்ட் சன்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து இயக்க இருக்கிறார் சிம்ரன். அஜித் விஜய், கமல் என முன்னணி ஹீரோக்கல் தொடங்கி அறிமுக ஹீரோக்கள் பலருடனும் நடித்த சிம்ரனுக்கு திரையுலகினர் தங்களில் பிறந்த நாள் வாழ்த்தினை சிம்ரனுக்கு தெரிவித்தனர்.

 

4. #mnmforcauvery

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் இன்று வரை வெளியிடாத நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டிக்து வரும் 7ம் தேதி திருச்சியில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் துவங்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று  அறிவித்தார்.

5. 

டெல்லியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டினார்.பின்னர், எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் வீரப்ப மொய்லி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுதிப் பந்தோபாத்யாய், அதிமுக எம்.பி மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலையும் சந்திர பாபு நாயுடு சந்தித்து பேசினார்.

 

 

×Close
×Close