twitter viral video today : அமெரிக்காவில் ’ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மோடியையும், ட்ரம்பையும் இணைத்து சிறுவன் எடுத்த செல்பி ஒட்டு மொத்த இணையத்தையும் புரட்டி போட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் அவர் கலந்துக் கொள்கிறார்.இதில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி' (howdy modi) நிகழ்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்முறை கால்பந்து மைதானங்களில் ஒன்றான என்.ஆர்.ஜி ஸ்டேடியத்தில் "ஹவுடி, மோடி" நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50,000 பேர் பங்கேற்றார்கள். மோடியுடன், டிரம்பும் ஒரே மேடையில் பங்கேற்றது பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
நிகழ்ச்சியில் மோடியை வரவேற்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பரதநாட்டியம், குச்சிப்புடி, உட்பட பாரம்பரிய நடனங்களும் அடங்கும்.இந்த நிகழ்வில் மோடியும், ட்ரம்பும் இணைந்து கலந்துக் கொண்டனர்.
Memorable moments from #HowdyModi when PM @narendramodi and @POTUS interacted with a group of youngsters. pic.twitter.com/8FFIqCDt41
— PMO India (@PMOIndia) September 23, 2019
அப்போது கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் ட்ரம்ப், மோடியை நோக்கி ஓடி வந்து செல்பி எடுக்க முற்பட்டான். அதைப்புரிந்துக் கொண்ட ட்ரம்ப் உடனே போஸ் கொடுக்க தயாராகினார்.இவர்களுடன் மோடியும் இணைந்துக் கொண்டார். எந்தவித பதற்றமும் இல்லாமல் சிறுவன் சிரித்தப்படியே இரு துருவங்களை இணைத்து செல்பி எடுத்தான். இதை பார்த்த அங்கிருந்த மற்ற சிறுவர், சிறுமியர்கள் ஆச்சரியத்தில் அப்படியே நின்றனர்.
போஸ் கொடுத்த பின்பு சிறுவனுக்கு கைக்கொடுத்து ட்ரம்ப் பாராட்டினார். மோடி, சிறுவனின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ஒரே நாளில் இந்த செல்பி இணையத்தில் வைரலானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.