New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/06/sachin-59.jpg)
Today viral video
தரையில் அமர்ந்தப்படி அழகாக சிகிச்சை பார்த்து, நாயின் காயத்தை சரி செய்தார்.
Today viral video
today viral video: காயம் பட்ட தெரு நாய், தனது காயத்திற்கு மருந்து போட்டவருக்கு தரையில் தலைவணங்கி நன்றி கூறும் வீடியோ இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
நாய் நன்றி உள்ள ஜீவன் என்பது எத்தனை முறை கூறினாலும் தகும். ஒருமுறை தனக்கு உதவியவர்களை நாய்கள் அவ்வளவு எளிதாக மறந்து விடாது. அப்படித்தான் நாம் ஒரு தெரு நாய்க்கு ஒருமுறை பிக்கெட் வாங்கி கொடுத்தால் போதும், அடுத்த முறை நாம் எப்போது அந்த தெரு பக்கம் சென்றாலும் நம்மை சரியாக அடையாளம் கண்டுப்பிடித்து அந்த நாய் அன்பாக நம் காலை நக்கும்.
நாம் கூட்டத்தில் சென்றாலும் சரி அந்த பிராணி நம்மை மிக சரியாக கண்டுப்பிடிக்கும். பிஸ்கெட் போட்டதற்கு இப்படி என்றால்? அந்த நாயின் உயிரையே காப்பாற்றினால் என்ன செய்யும் யோசித்து பாருங்கள். சாகும் வரை அவர்களை மறக்காது. அப்படி ஒரு சம்பவம் தான் துருக்கியில் நடந்துள்ளது.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த தெரு நாய் தீடீரென்று வண்டியில் மாட்டிக் கொண்டு காயமுற்றது. ரத்தம் வழிந்த நிலையில், தனது காயத்தை போக்க அதுவே நடந்து அருகில் இருந்த மெடிக்கல் ஷாப் ஒன்றிற்கு சென்றது. நாயின் காயத்தை பார்த்த கடையில் பணிப்புரியும் பெண், அந்த நாய்க்கு தரையில் அமர்ந்தப்படி அழகாக சிகிச்சை பார்த்து, நாயின் காயத்தை சரி செய்தார்.
Senin o kimden yardım isteyeceğini bilen aklına,güzelliğine,usluluğuna kurban olurum.patisi kanamış,eczaneye girip patisini uzattı,yarasını gösterdi bana. pic.twitter.com/MUYE9yFM6j
— Badores (@badores) 20 June 2019
தனது வலியை போக்கிய அந்த பெண்ணுக்கு, அந்த நாய் தரையில் தலை வணங்கி நன்றி சொன்னது. இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வாய் இல்லா ஜீவனுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சிகிச்சை பார்த்த அந்த பெண்ணுக்கும், நன்றியை மறவாத அந்த தெரு நாய்க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.