New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/08/sachin-73.jpg)
today viral video
கிருஷ்ண ஜெயந்தி வந்ததால் புல்லாங்குழலுடன் இருக்கும் தோனி வீடியோ
today viral video
today viral video : பேட்டை பிடித்த கையில் புல்லாக்குழலுடன் இசையில் மூழ்கிய தோனியை பார்த்து இருக்கிறீர்களா? இதோ அந்த வீடியோ.
இந்திய அணிக்காக மூன்றுவகை ஐ.சி.சி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. அவரது ஓய்வு குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக உலக கோப்பை தொடருக்கு பின்னர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தோனி ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் எழுந்த வண்ணமே உள்ளன. ஆனால் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இதற்கிடையில் ராணுவ பயிற்சிக்கு சென்று சமீபத்தில் வீடு திரும்பிய தோனி, புதுமாதிரியான கெட்டப்பில் தோன்றி அனைவருக்கும் ஷாக் தந்தார். இது தோனி தானா? என்று கேட்கும் அளவிற்கு அவரின் தோற்றம் இருந்தது. இந்நிலையில், தோனி கையில் புல்லாங்குழலுடன் காட்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதுவும் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் என்ற டைட்டில்.
Our Krishna Playing Flute. ????????????#KrishnaJayanthi pic.twitter.com/FjrmI4g13l
— DHONIsm™ ❤️ (@DHONIism) August 23, 2019
இந்த வீடியோவில் தோனி மெய் மறந்து புல்லாங்குழல் வாசிக்கிறார்.மைதானத்தில் பேட்டில் சிக்சர்களால் கிழித்த தோனி இப்படி புல்லாங்குழலில் அமைதியாக காட்சியளிக்கும் வீடியோ ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் அது பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ண ஜெயந்தி வந்ததால் புல்லாங்குழலுடன் இருக்கும் தோனி வீடியோ தற்போது வைரல் ஆகி வருவதும் மேலும் அது சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரியவந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.