இன்றைய டாப் ஹாஷ்டேக்குகள் என்ன?

சமூக வலை தளங்களில் இன்று அதிகம் பார்க்கப்பட்டு டாப் டிரெண்டிங் லிஸ்டில் உள்ள ஹாஷ்டேகுகள் அதன் குறித்த தகவல்கள் பற்றிய முழு விபரங்கள்.

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் அனைத்துத் துறையை சார்ந்த வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் தினந்தோறும் பல்வேறு விவரங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலும் பகிரப்பட்டு, அதிகம் பார்க்கப்பட்டு டாப் டிரெண்டிங் லிஸ்டில் உள்ள ஹாஷ்டேகுகள் அதன் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

1. #INDvBAN
8 பந்தில் 29 ரன்கள் கலங்கிய வங்கதேசம் அதிரும் ட்விட்டர். நேற்று நிகழ்ந்த T20 போட்டியில் பங்களாதேஷ் வெற்றி கோப்பையை தட்டிச்செல்லும் என்று எண்ணியிருந்த வேளையில், இறுதி சிக்ஸரில் இந்தியாவுக்கு வெற்றி கோப்பையை பெற்றுத் தந்தார் தினேஷ் கார்த்திக். இந்தியா வெற்றிபெற 5 ரன்கள் தேவைப்படும் நிலையில், இறுதி பந்தில் சிக்ஸர் அடித்து அரங்கையே அதிரச் செய்தார். இந்த வெற்றியை முன்னிட்டு தற்போது சென்னை மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதுவே ட்விட்டரில் டாப் டிரெண்டிங்க்.

2. #LaluPrasadYadav
சென்னையில் இரண்டாவதாக டாப் ட்விட்டர் டிரெண்டில் உள்ளது லாலுவும் ஊழல் வழக்கின் தீர்ப்பும். கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே 3 கால்நடை தீவன ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனையை லாலு பெற்றுள்ள நிலையில் இன்று 4-வது வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளது. இது குறித்து அவரின் தண்டனை விவரம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

3. #Sneha
நடிகர் அசோக் திருமணத்தில் கனவு கன்னி சினேகா. சமீபத்தில் வெளியான ‘பிடிச்சிருக்கு’ மற்றும் ‘முருகா’ போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் அசோக் திருமணத்தில், நடிகை சினேகா, அவரின் கணவரும் நடிகருமான பிரசன்னா மற்றும் அத்தம்பதியின் மகன் விஹான் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்திருமணத்தில் மணமக்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வாழ்த்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சினேகா. மிளிரும் பட்டாடையில் ஜொலிக்கும் சினேகாவின் அழகில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர்.

4. #Nammavar
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் ஹாசனின் புதிய மீசை கெட் அப் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறது. நம்மவராக முழுநேரமும் அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டிருந்தாலும், புதிய படங்களில் நடிப்பதை அவர் கைவிடவில்லை. இதற்குச் சாட்சியாக அவரின் புதிய கெட் அப் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. சிலர் விருமாண்டி கெப் அப்பில் ஆண்டவர் என்றும், மற்றும் சிலர் மீண்டும் தேவர் மகன் தோற்றத்தில் உலக நாயகன் என்றும் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால் இந்தத் தோற்றம் “இந்தியன் 2” படத்திற்காக இருக்கலாம் என்கின்றனர்.

5. #Lingayat
லிங்காயத் சமூகத்தைத் தனி மதமாக அடையாளப்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக லிங்காயத்தினர் கோரிக்கை வைத்தனர். புத்த, சீக்கிய மதங்களைப் போல் தங்களது சமூகமும் தனி மதமாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் வேண்டுகோளை அங்கீகரித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா. மேலும் இது குறித்து மத்திய அரசிடமும் ஒப்புதல் கோரப்படும் என்றார். ஒருபுறம் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தோருக்கு இச்செய்தி மகிழ்ச்சியளித்தாலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர் எடுத்துள்ள இந்த முடிவு பா.ஜ.க-விற்கு அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close