scorecardresearch

இப்படி பொசுக்னுக்கு போய் மேகத்திலே ஒழிஞ்சுகிட்ட… வைரலாகி வரும் இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்!

Funney and comedy tamil memes latest 2022: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வரும் இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்கள்.

Today’s trending comedy memes in tamil latest 2022
trending tamil memes today

Tamil Trending Memes: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் நாம் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.

அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

நடப்பது vs நினைப்பது மீம்ஸ்:

பல நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் உள்ளது. இதை தொடர்புபடுத்தும் விதமாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

ஐபில் மீம்ஸ்:

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கி விளையாடி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா அச்சம் இன்னும் நிலவி வருவதால், அதை தவிர்க்கும் வகையில் இந்த முறை லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. மும்பையில் உள்ள 3 மைதானங்களில் 55 ஆட்டங்களும், புனேயில் 15 ஆட்டங்களும் இடம் பெறுகிறது.

அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று எங்கு மற்றும் எந்த தேதிகளில் நடக்கிறது என்ற விவரத்தை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதன்படி ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள்

மே 24 – குவாலிபையர் 1 – கொல்கத்தா
மே 25 – எலிமினேட்டர் – கொல்கத்தா
மே 27 – குவாலிபையர் 2 – அகமதாபாத்<br>மே 29 – இறுதிப்போட்டி – அகமதாபாத்

ஆகிய தேதிகளில் குறிக்கப்பட்ட மைதானங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் நடப்பு தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது.

நேற்றை ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதமுள்ள ஆட்டங்களில் நல்ல ரன்ரேட்டில் வெற்றியை ருசித்தால் அந்த அணிக்கு பிளே-ஆஃப்க்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடர் மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

இணையத்தை கலக்கி வரும் இன்றைய வைரல் மீம்ஸ்கள்:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Todays trending comedy memes in tamil latest 2022