New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/baby-orders-furniture-worth-lakhs.jpg)
22 மாதங்களே ஆன சுட்டி குழந்தை, வால்மார்ட்டில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கு பொருள்களை ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பிரமோத் - மது தம்பதியினரின் வீட்டிற்கு, திடீரென வால்மார்ட்டில் இருந்து பெரிய பெரிய பாக்ஸ்களில் தொடர்ச்சியாக பர்னிச்சர் பொருள்கள் வந்திறங்கியுள்ளது. இருவரும் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை என்பதால் குழப்பத்தில் இருந்துள்ளனர். பின்னர் விசாரிக்கையில் தான், இந்தச் சுட்டி தனத்திற்கு பின்னால் தங்களது 22 மாத குழந்தை அயான்ஸ் இருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.
நியூ ஜெர்சியில் குடியேற போகும் வீட்டிற்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை அயான்ஸ் தாயார் வால்மார்ட் கார்ட்டில் ஸ்லெக்ட் செய்து வைத்திருந்துள்ளார். ஆனால், அதன் பிறகு அதனை செக் செய்யவில்லை.
இதற்கிடையில், செல்போனை விளையாடும் எடுத்த அயானஸ், ஒருபடி மேல் சென்று கார்ட்டில் வைத்திருந்த பொருள்களை வரிசையாக ஆர்டர் செய்துள்ளார். கிட்டத்தட்ட $2,000 (இந்திய மதிப்பில் ரூ. 1.49 லட்சத்துக்கு மேல்) மதிப்புள்ள மலர் ஸ்டாண்டுகள், நாற்காலிகள் மற்றும் பிற பர்னிச்சர்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை பிரமோத் குமார் கூறுகையில், " இந்நிகழ்வு மூலம் வீட்டில் உள்ள கேட்ஜேட்களை பத்திரமாக வைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டோம். இதுமட்டுமின்றி, செல்போனுக்கு பாஸ்வேர்ட் போடுவதன் அவசியத்தையும் புரிந்துகொண்டோம்" என்றார்.
அயான்ஸ் வால்மார்டில் ஆர்டர் செய்த பொருள்கள் அனைத்தும் டெலிவரி செய்யப்பட்ட பிறகு அதனை உள்ளூர் வால்மார்ட் கடையில் ரிட்டன் செய்யவுள்ளதாக தம்பதியினர் தெரிவித்தார்.
முக்கியமாக, சிறுவனை அறியாமையை புரிந்தகொண்ட அந்நிறுவனம், ரிட்டன் செய்யப்படும் பொருள்களுக்கு முழு பணம் தருவதாகவும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.
அயான்ஸ் ஆர்டர் செய்த பொருள்களில் சிலவற்றை மட்டும், மகனின் முதல் ஆன்லைன் ஷாப்பிங் என்ற நியாபகத்திற்காக வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.