New Update
/indian-express-tamil/media/media_files/AbkgYbonb4P66DkaMfST.jpg)
நிகழ்ச்சி மைதானத்தின் கூரையில் இருந்து குதித்து மிஷன் இம்பாசிபிள் ஹீரோ சாகசம் செய்தார்.
பாரிஸில் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முடிவடைந்தது. கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் கோலாகலமாக முடிவடைந்தது. இந்தநிகழ்ச்சியில், ஹாலிவுட் நட்சத்திரம் டாம் குரூஸ் செய்த சாகசம் அங்கிருந்த பார்வையாளர்களை பிரம்மிப்பூட்டியது.
மிஷன் இம்பாசிபிள் ஹீரோ சாகசத்தில் ஈடுபட்டார். நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டேட் டி பிரான்சின் மைதானத்தின் கூரையில் இருந்து குதித்து பாதுகாப்பாக தரையிறங்கினார். அதோடு பைக் சாகத்திலும் தொடர்ந்தார்.
62 வயதான ஹாலிவுட் நட்சத்திரம் குரூஸ், தனது பைக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தி ஈபிள் கோபுரத்தைத் தாண்டி செல்வது வீடியாவில் காட்டப்பட்டுள்ளது.
@TomCruise performing a LIVE stunt for the handover sequence in epic fashion. #Olympics #TomCruise #MissionComplete pic.twitter.com/Pu3vQaLZkr
— All About Movies (@JeremyChopra) August 11, 2024
அதோடு அவரின் அடையாளமான ஸ்கைடிவிங் செய்து அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்வது போல் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. டாம் குரூஸில் இந்த சாகசம் பார்வையாளர்களை கவர்ந்திழுந்து விருந்தாக அமைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.