New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tomato-memes-1.jpg)
தக்காளி விலை மீம்ஸ்
தக்காளி விலை மீம்ஸ்
வீடுகளில் சமைக்கும் ஆண்கள், பெண்கள் என எல்லோருமே தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யோசிப்பதோடு விட்டுவிட்டால், பரவாயில்லை. கூகுளில் வேறு தேடி வைத்துவிடுகிறார்கள். அந்த கூகுள் அதிகமாக தேடப்பட்டது தக்காளி இல்லாமல் என்ன குழம்பு வைப்பது, தக்காளி இல்லாமல் என்ன சமையல் செய்வது என்று காட்டி நம்மை கேலி செய்கிறது.
இதற்கு காரணம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி ஆகிய நகரங்களிலும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் தக்காளி விலை ஒரே வாரத்தில் 100 ரூபாய்க்கு உயர்ந்து வானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டது. தக்காளி திடீரென விலை உயர்ந்ததால் நடுத்தரக் குடும்பத்தினர் எல்லோருமே அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
பல மாதங்கள் ரூ.5, 10 என்று சீந்திக் கிடக்கும், அதிகபடமாக ரூ.40-ஐத் தாண்டாது. இப்படியாப்பட்ட, தக்காளி இப்படி ஆண்டுக்கு ஒரு முறை விலை உயர்ந்து மக்களின் வயிற்றில் புளியைக் கறைத்துவிடும்.
தக்காளி விலை உயர்வைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் நமது நெட்சன்களோ மீம்ஸ்களைப் போட்டு தேற்றிக் கொள்கிறார்கள். அப்படி இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியான தக்காளி விலை மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
ஆப்பிள் மாதிரி இருக்கும் தக்காளியையும் ஆப்பிளையும் அருகருகெ வைத்து, ஆப்பிள் விலை ரூ.140, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்று விலை குறிப்பிட்டு, ஆப்பிள் தக்காளியைப் பார்த்து வெறுப்பேத்துறயா என்னய… என்று கேட்பது போல மீம்ஸ் போட்டு கிண்டல் செய்திருக்கிறார்கள்.
தங்கம் விலை குறைந்தது, தங்கம் வாங்க சரியான நேரம் என்று விளம்பரம் போட, வடிவேலு குரலில், அவனவன் தக்காளி வாங்கவே கஷ்டப்படுறான் போவியா என்று தக்காளி விலை உயர்வால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலை மீம்ஸால் ஒரு நெட்டிசன் வெளிப்படுத்தியுள்ளார்.
பத்தாண்டுகளாக நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மக்களை மிரட்டி வந்த நிலையில், புதுசா தக்காளி விலை ரூ.100-க்கு உயர்ந்ததை வைத்து மீம்ஸ்கள் போட்டிருக்கிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.