2024 ஆம் ஆண்டை இன்னும் சில நாட்களில் நாம் நிறைவு செய்ய இருக்கும் நிலையில், இந்தியாவின் கவனத்தை ஈர்த்த தருணங்கள், நபர்கள் மற்றும் தலைப்புகளை திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. அந்த வகையில், உலகின் மிகப்பெரிய தேடுதல் பொறியான கூகுள், அதன் இந்தியாவின் ஆண்டின் தேடல் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் இந்தியர்களின் முதல் 10 பிரபலமான தேடல்களின் பட்டியலை வெளியிட்டடுள்ளது.
சுவாரசியமாக, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), டி20 உலகக் கோப்பை மற்றும் பா.ஜ.க ஆகியவை அதிகம் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. இதன் மூலம், இந்திய மக்கள் கிரிக்கெட் மற்றும் அரசியல் மீது எவ்வளவு ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
இந்தியாவில் அதிகம் பிரபலமான தேடல்களில் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறுவது ஆச்சரியமல்ல, ஏனெனில் இது ஒரு விளையாட்டாக மட்டும் இல்லாமல் பல இந்தியர்களுக்கு ஒரு உணர்ச்சியாக இருக்கிறது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), அதன் நட்சத்திர வீரர்களுக்காக அறியப்பட்ட மிகவும் பிரபலமான கிரிக்கெட் லீக் தொடராக இருந்து வரும் நிலையில், இந்த சீசனில் அனைவரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக சமீபத்திய வீரர்கள் ஏலம் பரபரப்பாகப் பேசப்பட்டது.
கடந்த நவம்பரில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியடைந்த பிறகு, இந்த ஆண்டு தொடர் இன்னும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்தியா கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 வடிவங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பெரும் கவனத்தை ஈர்த்தது.
கூடுதலாக, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில், 16 விளையாட்டுத் துறைகளில் 117 போட்டியாளர்களுடன், இந்திய விளையாட்டு வீரர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இடம்பெற்றது.
70 ஆண்கள் மற்றும் 47 பெண்களைக் கொண்ட இந்தக் குழு, பதக்கங்களை இலக்காகக் கொண்டு, ஒலிம்பிக் விளையாட்டுகளில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவதால் கணிசமான கவனத்தைப் பெற்றது.
அரசியல் முன்னணியில், ஒரு முக்கிய சிறப்பம்சமாக 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதீய ஜனதா கட்சி (பா.ஜ.க) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேலும், இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் ஒன்றாக பா.ஜ.க ஆனது .
மேலும், அதிக வெப்பம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்பி, இந்த ஆண்டு சாதனை முறியடிக்கும் வெப்பநிலையை இந்தியா எதிர்கொண்டது, இது ஒரு பிரபலமான தலைப்பாகவும் மாறியது.
துரதிர்ஷ்டவசமாக, இந்த ஆண்டு, மதிப்பிற்குரிய தொழிலதிபர் மற்றும் மனிதநேய பண்பாளர் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியர்கள் இரங்கல் தெரிவித்தனர். வணிகம், தொண்டு பணிகள் மற்றும் சமூக முயற்சிகளுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக மக்கள் அவரை நினைவு கூர்ந்தனர்.
ரேங்க் | வகை | பிரபலமான முக்கிய வார்த்தை |
1 | விளையாட்டு | இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) |
2 | விளையாட்டு | டி20 உலகக் கோப்பை |
3 | அரசியல் | பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) |
4 | அரசியல் | தேர்தல் முடிவுகள் 2024 |
5 | விளையாட்டு | ஒலிம்பிக் 2024 |
6 | வானிலை | அதிக வெப்பம் |
7 | குறிப்பிடத்தக்க நபர்கள் | ரத்தன் டாடா |
8 | அரசியல் | இந்திய தேசிய காங்கிரஸ் |
9 | விளையாட்டு | புரோ கபடி லீக் |
10 | விளையாட்டு | இந்தியன் சூப்பர் லீக் |
ஆதாரம்: கூகுள் இந்தியாவின் தேடல் ஆண்டு 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.