மீரட்டில் புதுமாப்பிள்ளை ஒருவர் தனது ரூபாய் நோட்டு மாலையைத் திருடியதாகக் கூறப்படும் திருடனைத் துரத்துவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதே போல, கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் இரண்டு பேர் ஒரு பெண்ணைக் காப்பாற்றும் வீடியோ மத்தியப் பிரதேசத்தில் புலியை நேருக்கு நேர் எதிர்கொண்ட வனக் காவலர் ஆகிய வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் வைரலான டாப் 5 வீடியோக்களி இங்கே தருகிறோம்.
திருடனைத் துரத்திய உ.பி. மாப்பிள்ளை
#मेरठ में दुल्हा घुड़चढ़ी पर था. उसकी नोटों की माला से एक चोर नोट खींचकर भागा
— Narendra Pratap (@hindipatrakar) November 24, 2024
शादी की रस्में छोड़कर दुल्हा चोर के पीछे भागा. चोर ने लोडर स्टार्ट किया और निकलने लगा. दौड़ते लोडर में खिड़की से दूल्हे ने एंट्री मारी तो चोर लोडर छोड़ भागने लगा
दूल्हे ने चोर पकड़ा और जमकर धुनाई की pic.twitter.com/7liYToncMP
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் மாப்பிள்ளை ஒருவர் தனது கரன்சி நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை திருடிய நபரை விரட்டியடித்து ஹீரோவாக மாறினார். இந்த வைரல் வீடியோவில், மாப்பிள்ளை சாம்பல் நிற உடை மற்றும் சிவப்பு தலைப்பாகை அணிந்து, மினி-டிரக்கைத் துரத்துவதற்காக ஒரு வழிப்போக்கரின் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்கிறார்.
ஹீரோக்களாக மாறிய ரயில்வே போலீசார்
कानपुर सेंट्रल पर चलती ट्रेन से महिला कूद गई, मौके पर जीआरपी निरीक्षक ने होशियारी दिखाते हुए उसकी जान बचा ली और हादसा टाला। pic.twitter.com/9MTCljopPJ
— Amrit Vichar (@AmritVichar) November 24, 2024
உத்தரப் பிரதேசம், கான்பூர் மத்திய ரயில் நிலையத்தில் தனது குழந்தைகளை பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே போலீசார் இரண்டு பேர் காப்பாற்றினர். அதிகாரிகள் ரயில் பெட்டியுடன் ஓடும்போது, பெண் கதவுக்கு வெளியே சாய்ந்திருப்பதை வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வனப் பாதுகாவலர் vs புலி நேருக்கு நேர்
What a story of bravery and presence of mind. Shri Annulal and Dahal - two forest guards encountered a tiger in Satpura TR while on duty. One of them captured on mobile. What it takes to save wildlife and forest on field. pic.twitter.com/SuNAadit4y
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 24, 2024
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் வனப் பாதுகாவலர் ஒருவர் புலியுடன் நேருக்கு நேர் எதிர்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் அந்த அதிகாரி தனது சக ஊழியருடன் பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
துபாயின் 24 காரட் தங்க தேநீர்
துபாயில் உள்ள ஒரு ஓட்டலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 24 காரட் தங்க டீ பரிமாறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. டீ தூய வெள்ளி கட்லரியில் பரிமாறப்படுவதாகவும், அதன் மேல் கோல்ட் டஸ்ட் மற்றும் தங்க இலைகள் இருப்பதாகவும் வைரல் வீடியோ குறித்து ஒரு விளாக்கர் கூறியுள்ளார்.
சிதார் இசைக்கருவியில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தீம் மியூசிக்
Who would have imagined the Game of Thrones theme on Sitar would sound so beautiful and epic 🤯🔥 pic.twitter.com/FybZIcEn1g
— Yo Yo Funny Singh (@moronhumor) November 24, 2024
பிரபல சிதார் இசைக் கருவி வாசிக்கும் கலைஞரான ரிஷப் சிகிராம் ஷர்மா தனது சிதாரில் கேம் ஆப் த்ரோன்ஸின் தீம் மியூசிக்கை மற்றொரு கலைஞரின் தபேலாவின் துணையுடன் வாசித்து நெட்டிசன்களின் இதயங்களை வென்றார். இதை அவர் ஒரு கச்சேரியில் வாசித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.