சேலம் ஏற்காடுக்கு வந்த ஒரு சுற்றுலாப்பயணி அங்கே ஆட்டோக்காரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி அமெரிக்க காவல்துறையிடம் புகார் தெரிவித்த சம்பவம் டுவிட்டரில் நகைச்சுவை வைரலாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு சுற்றுலாத்தளமாக உள்ளது. ஏற்காடுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால், அங்கே உள்ள ஆட்டோக்காரர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது என்பது பலரும் புகார் கூறுவது வழக்கமாக உள்ளது. ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் பலருக்கும் அதிக ஆட்டோ கட்டணம் பற்றி புகார் உள்ளது.
அந்த வகையில், சேலம் ஏற்காடுக்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதனால், வருத்தம் அடைந்த அவர் இதனை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதனால், இணையத்தில் டுவிட்டருக்கு சென்று சேலம் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ற கணக்குக்கு சென்று, ஏற்காட்டில் அதிக ஆட்டோ கட்டணம் வசூலிப்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு கிலோ மீட்டர் தூரம் ஆட்டோவில் செல்ல ரூ.50 வசூலிக்கின்றனர். இந்த மாதிரி பிரச்னையெல்லாம் நிர்வாகம் கண்டுகொள்ளாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டுவிட்டர் இந்த புகாரைப் பார்த்த சேலம் காவல்துறையினருக்கு ஒரே தலைவலி. இந்த தலைவலி ஏற்பட்டது தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்ட காவல் துறைக்கு அல்ல. அமெரிக்காவில் உள்ள சேலம் காவல்துறைக்கு ஏற்பட்டது.
வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!
அமெரிக்காவில் ஒரிகான் மாகாணத்தில் சேலம் என்ற இடம் உள்ளது. அமெரிக்க சேலம் காவல்துறை டுவிட்டரில் தனது கணக்கை Salem Police Dept. என்ற பெயரில் வைத்துள்ளது.
இதை கவணிக்காத சுற்றுலாப்பயணி, தமிழக சேலம் மாவட்ட காவல்துறை என்று நினைத்து டுவிட்டரில் புகார் தெரிவித்துள்ளார்.
ஒருவழியாக இதைப் புரிந்துகொண்ட அமெரிக்காவின் சேலம் காவல்துறை இது அமெரிக்காவில் ஒரிகானில் உள்ள சேலம் காவல்துறை என்று அவருக்கு பதிலளித்தனர்.
Shakespeare : What is in the name.
Twitter : Oh, please ???? pic.twitter.com/UfHQvuTZzT
— Arun Bothra (@arunbothra) November 27, 2019
இதனை புவனேஷ்வரைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் பார்த்துவிட்டு, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் புகழ்பெற்ற வசனமான பெயரில் என்ன இருக்கிறது என்ற வசனத்தைக் குறிப்பிட்டு, பாருங்க தமிழ்நாட்டில் உள்ள சேலம் ஏற்காட்டில் அதிக ஆட்டோ கட்டணப் புகாரை அமெரிக்க சேலம் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார் என்று சிரித்துவைத்தார்.
இதையடுத்து, இந்த நகைச்சுவை சம்பவத்தை டுவிட்டரில் பலரும் பகிர டுவிட்டரில் இந்த நகைச்சுவை வைரலானாது.
இதனைத் தொடர்ந்து, டுவிட்டர் பயன்பாட்டாளர்கள் பலரும் சேலம் காவல்துறைக்கும் அமெரிக்க சேலம் காவல்துறைக்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுபடுத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.