90ஸ் கிட்ஸ் சிறுவர்களாக இருக்கும்போது ஒருவர் பின் ஒருவராக வரிசையாக ரயில் போல சுற்றி நடக்கும் ரயிலு வண்டி விளையாட்டு விளையாடிய நினைவு இருக்கிறதா? அதே போல, யானைகளும் ஒன்றன் பின் ஒன்று என வரிசையாக ரயில் பாதையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யானைகள் நிலத்தில் வாழும் மிகப் பெரிய விலங்குகள் மட்டுமல்ல. யானைகள் மிகவும் அறிவுக்கூர்மையும் நுண்ணுணர்வும் மிக்க விலங்குகள். யானைகள் மிகவும் எச்சரிக்கையாக சாலைகளைக் கடக்கும். மனிதர்கள் யானைகளின் வழித் தடங்களை ஆக்கிரமித்து சாலைகள் அமைத்துவிட்டோம், ரயில் பாதைகள் அமைத்துவிட்டோம். கட்டடங்கள் கட்டி தடை ஏற்படுத்திவிட்டோம். மனிதர்களின் இந்த யானைகளின் வழித் தடங்களை ஆக்கிரமித்துக்கொண்டு யானைகள் தங்கள் வழித்தடத்தில் சென்றால், யானைகள் அட்டகாசம் செய்வதாக அதன் மீது பழி போடுகிறோம். யானைகள் தான் காட்டின் பரப்பை பராமரிப்பவை. காடுகளின் பாதுகாவலர் யானைகள்தான்.
பெண் யானைகள்தான் யானைக் கூட்டத்தை வழி நடத்தும். யானைகள் மனிதர்களைப் போல ஒரு சமூக விலங்கு. யானைகளின் மந்தை சிறிய அளவிலும் பெரிய அளவிலும் உள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் யானைகள் ரயில்களில் அடிபடாமல் தடுக்கப்பட்டுள்ளன. ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யானைகள் ரயில் பாதையைக் கடப்பதை தூரத்தில் இருந்தே ரயில்களை நிறுத்தி யானைகள் மோதாமல் தடுக்கப்படுகின்றன. காடுகள் வழியே செல்லும் ரயில் பாதைகள் வழியாக யானைகளின் வழித்தடங்கள் இருப்பதால், யானைகள் ரயில் பாதைகளைக் கடக்கும் நிகழ்வுகள் நாள்தோறும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், யானைகளும் ஒன்றன் பின் ஒன்று என வரிசையாக ரயில் பாதையைக் கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் ஒரு மந்தையில் இத்தனை யானைகளா என்று வியப்படையாமல் இருக்க முடியாது.
A train of elephants crossing a railway line. Elephant herd size varies from small to big. I have seen a single herd of upto 95 elephants once. Keep counting in this family. pic.twitter.com/shAFYXUNmG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 30, 2024
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ குறித்து அவர் குறிப்பிடுகையில், “ரயில் பாதையைக் கடக்கும் யானைகளின் ரயில். யானைக் கூட்டத்தின் அளவு சிறியது முதல் பெரியது வரை மாறுபடும். 95 யானைகள் கொண்ட ஒரு கூட்டத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். இந்தக் குடும்பத்தில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டே இருங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல, ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு யானைகளின் மந்தை காட்டில் மண் சாலையைக் கடக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
A matriarch elephant leads her herd somewhere in Africa. Elephant matriarchs play an essential role in leading their herds with incredible memory, direction, & social intelligence. They command respect through disciplined guidance, using decades of knowledge to navigate complex… pic.twitter.com/jTks4ls0UE
— Supriya Sahu IAS (@supriyasahuias) October 29, 2024
இந்த வீடியோ குறித்து சுப்ரியா சாஹு குறிப்பிடுகையில், “ஆபிரிக்காவில் எங்கோ ஒரு பெண் யானை தன் கூட்டத்தை வழிநடத்துகிறது. நம்பமுடியாத நினைவாற்றல், திசை மற்றும் சமூக நுண்ணறிவு ஆகியவற்றுடன் தங்கள் மந்தைகளை வழிநடத்துவதில் யானைத் தாய்மார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிக்கலான நிலப்பரப்புகளுக்குச் செல்லவும், பற்றாக்குறையான வளங்களைக் கண்டறியவும் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கவும் பல தசாப்தங்களாக அறிவைப் பயன்படுத்தி, ஒழுக்கமான வழிகாட்டுதலின் மூலம் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள். அவர்களின் தலைமை உண்மையிலேயே அசாதாரணமானது மற்றும் கவர்ச்சிகரமானது.” என்று குறிப்பிட்டு வைல்ட் ஃபிரண்ட்ஸ் ஆப்பிரிக்கா (@WildfriendsUG) என்ற பக்கத்தில் வெளியான வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். யானைகள் எவ்வளவு அழகாக வரிசையாக செல்கின்றன. ரயில்பாதையை வரிசையாக கடந்து செல்வதைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.