New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/DqQO6M3Bm9k35VDr4xAy.jpg)
மகளுக்கு ஊசி போடும்போது கதறி அழுத தந்தை! உருக வைக்கும் பாசம்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஊசி போடுவதற்கு குழந்தையை விட அவரது தந்தை அதிகமாக அழுகிறார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
மகளுக்கு ஊசி போடும்போது கதறி அழுத தந்தை! உருக வைக்கும் பாசம்!
தந்தை-மகள் உறவு எப்போதும் மிகவும் அழகாகவும், ஆழமாகவும் இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் லிட்டில் பிரின்சஸ்களாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது. அந்த வகையில், தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும், இதுதான் இணையத்தில் வைரலாகி வரும் மிக அழகான வீடியோ என்று கூறி வருகின்றனர்.
குழந்தைகள் பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாக அவர்களின் உடல் நலனை காக்கும் வகையில் சில தடுப்பு ஊசிகள் செலுத்தப்படும். குறிப்பாக போலியோ, அம்மை உள்ளிட்ட சில முக்கிய தடுப்பு ஊசிகள் போடப்படும். ஊசி போட பெரியவர்களே பயப்படும் நிலையில், குழந்தைகள் கண்டிப்பாக அழுதுவிடும். ஆனால், இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஊசி போடுவதற்கு குழந்தையை விட அவரது தந்தை அதிகமாக அழுகிறார். இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில் கொண்டுவரும் போதே அந்த தந்தை அழ தொடங்கிவிடுகிறார். பிறகு குழந்தையின் கையில் ஊசி போடப்பட்ட நிலையில், குழந்தை துடித்து அழுவதைக் கண்டு அவர் கதறி கதறி அழுகிறார். குழந்தைக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்போல அவர் குழந்தையை அணைத்துக்கொண்டு அழுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மகள் என வரும்போது அனைத்து தந்தைகளும் குழந்தைகளாக மாறி விடுகின்றனர் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இப்போது யாரை முதலில் சமாதானம் செய்வது என தெரியாமல் தாய் குழப்பத்தில் இருப்பார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், இதுதான் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் மிக அழகிய வீடியோ என பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.