Advertisment

திடீரென சிவப்பு ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய வானம்... இது அழகு இல்லை, ஆபத்து!

ஸ்பெயினில் புழுதி புயலால் சிவப்பு – ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய வானம்; எச்சரிக்கும் வானிலை ஆய்வாளர்கள்

author-image
WebDesk
New Update
திடீரென சிவப்பு ஆரஞ்சு நிறத்திற்கு மாறிய வானம்... இது அழகு இல்லை, ஆபத்து!

The sky turns red-orange in Spain. See photos and videos: ஸ்பெயினில் சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் எடுக்கப்பட்ட வானத்தின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த புகைப்படங்கள் செயற்கையானவை அல்ல. அதாவது போட்டோஷாப் செய்யப்படவில்லை. செவ்வாயன்று சஹாரா தூசி மேகம் தாக்கியதால் ஸ்பெயின் முழுவதும் வானம் ஆரஞ்சு நிறமாக மாறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

Advertisment

டெஸ்குப்ரே சலினாஸ் என்ற ட்விட்டர்வாசி பகிர்ந்துள்ள புகைப்படம், நிலப்பரப்பில் பரந்த ஆரஞ்சு நிற வானத்தைக் காட்டியது. பலரும் ட்விட்டரில் அசாதாரண வானத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டனர். வீடியோக்கள் ஸ்பெயினின் நிலப்பரப்பு சிவப்பு-ஆரஞ்சு நிறத்தில் இருப்பதைக் காட்டியது.

ட்விட்டர் பதிவுகள் இதோ...

சிவப்பு-ஆரஞ்சு நிற வானத்தைப் பார்த்து பலர் திகைத்தனர். தலைநகர் மாட்ரிட் மற்றும் கிரனாடா மற்றும் லியோன் போன்றவற்றில் தெரிவுநிலை 2.5 மைல்களுக்கு சரிந்தது என்று அசோசியேட்டட் பிரஸ் (AP) ஸ்பெயினின் வானிலை சேவை மைய அறிக்கையை மேற்கோளிட்டுள்ளது.

ஸ்பெயினில் சிவப்பு-ஆரஞ்சு தூசி பல பகுதிகளில் காணப்பட்ட நிலையில், AP அறிக்கையின்படி, அதிகாரிகள் தலைநகர் மாட்ரிட்டுக்கு மிகவும் மோசமான காற்றின் தர எச்சரிக்கைகளை வெளியிட்டனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்காக ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்படும் முகக்கவசங்களை பயன்படுத்தவும், வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… இன்றைய சீரியல் மீம்ஸ்

ஸ்பெயினின் வானிலை சேவை மையமானது புழுதிப் புயல் "அசாதாரணமானது மற்றும் மிகவும் தீவிரமானது" என்று குறிப்பிட்டதுடன், புதன் கிழமை வரை தூசி தொடர்ந்து பரவும் என்றும் கணித்துள்ளது. ஸ்பெயினின் வானிலை சேவையின் செய்தித் தொடர்பாளர் ரூபன் டெல் காம்போ, AP செய்தி நிறுவனத்திடம், காலநிலை மாற்றத்திற்கு இந்த அத்தியாயத்துடன் நேரடி தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், கடந்த நூற்றாண்டில் சஹாரா பாலைவனத்தின் விரிவாக்கம் ஐரோப்பாவில் பெரிய தூசி புயல்களுக்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது, என்று கூறினார்.

"இது மணல் மழை போல் உள்ளது," "நான் இன்று காலை காரில் இருந்தேன், உண்மையில் மண் விழுந்து கொண்டிருந்தது." என்று அல்வரோ லோபஸ் என்ற மலாகா பல்கலைக்கழக மாணவர் கூறியதாக AP ஆல் மேற்கோள் காட்டப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo Viral Video Spain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment