தங்கமாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? ட்ரெண்டாகும் தங்க டாய்லெட்!

கோரோனெட் ஏற்கனவே அதிக வைரங்கள் பதித்த சன்க்ளாஸ், வாட்ச், மொபைல் கேஸ், ஹேண்ட் பேக் ஆகியவற்றை உருவாக்கி சாதனை படைத்தது.

Trending Gold toilet with 40,000 diamonds : இந்த உலகம் அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பதில்லை. மாறாக எது வித்தியசமாக இருக்கிறதோ அதன் மீதே சிறப்பு கவனம் செலுத்தும். செண்ட்ர் ஆஃப் அட்ராக்சனில் இருப்பதற்காக எதையாவது செய்து ட்ரெண்டாவது சமீபத்தில் அதிகமாகி வருகிறது. ஆனால் தற்போது ட்ரெண்டாகி வரும் ஒரு விசயத்தை நம்மாலே ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு கழிப்பறை. ஒரு டாய்லெட் ஷீட் முழுவதும் தங்கத்தால் ஆனது. அதில் 40 ஆயிரம் வைரக் கற்கள் பொருத்தப்பட்டிருப்பது இன்னும் கொஞ்சம் ஓவர்.

கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.

கண்காட்சி

சாங்காயில் நடைபெற்ற சீனா சர்வதேச இறக்குமதி பொருள்களுக்கான கண்காட்சி (China International Import Expo (CIIE)) ஒன்றில் ஹாங்காங்கைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தங்கத்தில் ஆன டாய்லெட் ஒன்றை காட்சிக்கு வைத்துள்ளார். இதன் விலை 12 மில்லியன் யுவான் அதாவது 1.3 மில்லியன் டாலர்கள்.

ஹாங்காங்கில் அமைந்திருக்கும் ஆரோன் ஷம் என்ற நிறுவனத்தின் கோரோனெட் ப்ராண்ட் இந்த டாய்லெட்டை உருவாக்கியுள்ளது. இதே கண்காட்சியில் 2 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வெள்ளை தங்கத்தால் உருவாக்கப்பட்ட கித்தாரும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


இந்த டாய்லெட் அதிக வைர கற்களைக் கொண்ட டாய்லெட்டுக்கான கின்னஸ் ரெக்கார்டுக்காக உருவாக்கப்பட்டது. கோரோனெட் ஏற்கனவே அதிக வைரங்கள் பதித்த சன்க்ளாஸ், வாட்ச், மொபைல் கேஸ், ஹேண்ட் பேக் ஆகியவற்றை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த டாய்லெட்டை அந்த நிறுவனம் யாருக்கும் விற்பனை செய்யவில்லை. மாறாக கூடிய விரைவில் வைர கலை அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கி இவர்களின் ‘கலைப்பொருட்கள்’ அனைத்தையும் அங்கு காட்சிக்கு வைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close