Trending news Burglar leaves message for SDM : மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தேவஸ் மாவட்டத்தின் துணை ஆட்சியர் வீட்டுக்கு திருட சென்ற நபர், வீட்டில் போதுமான பணமும், பொருட்களும் இல்லாமல் போனதால் வருத்தம் அடைந்தார். மேலும் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து சென்றுள்ளார். பணமே இல்லாத வீட்டில் பூட்டி எதுக்கு என்று மிகவும் வருத்தமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார்.
Jab paise nahi they toh lock nahi karna tha collector (பணமே இல்லையென்றால் அந்த வீட்டை பூட்டி வைக்க கூடாது, கலெக்டரே) என்று அவர் எழுதி வைத்து சென்ற கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காடெகான் நகரில் புதிதாக குடியிருக்க வந்துள்ள அந்த கலெக்டர் வீட்டில் ரூ. 30 ஆயிரம் பணமும் நகையும் திருடு போயுள்ளாதாக கோட்வாலி காவல்துறையினர் கூறுகின்றனர். காவல்துறையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் தங்கியிருந்த சப் கலெக்டர் வெளியூருக்கு சென்றுவிட்டு இரண்டு வாரம் கழித்து வந்த போது இந்த கடிதம் அவரிடம் கிடைத்துள்ளது. சப்கலெக்டரின் நோட்பேடை பயன்படுத்தி அவர் அந்த கடிதத்தை எழுதியுள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil