New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/img.jpg)
ப்ரவுன் நிறத்தில் இருந்தாலும், எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு இவை நிறமாறும் தன்மை கொண்டது என்று டோல்லி தெரிவித்துள்ளார்.
Extremely Rare Chapman's pygmy chameleon : தென்னாப்பிரிக்காவின் மாலாவி பகுதியில் உள்ள மாலாவி மலைத்தொடர்களின் கீழ் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகிறது உலகின் மிகச்சிறிய பச்சோந்திகளாக கூறப்படும் சாப்மென்ஸ் பிக்மி பச்சோந்திகள் Chapman's pygmy chameleon. இதன் அறிவியல் பெயர் Rhampholeon chapmanorum ஆகும். 1984ம் ஆண்டுக்கு பிறகு இந்த மழைக்காடுகளின் 80% பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளதால் இங்குள்ள உயிரினங்கள் அழிவின் விளிம்பை சந்தித்தன. அப்படியாக மறைந்து போன விலங்குகளில் இந்த பச்சோந்தியும் அடங்கும்.
இந்நிலையில் சமீபத்தில் இந்த பச்சோந்தி மீண்டும் ஆராய்ச்சியாளர்கள் பார்வையில் சிக்கி எங்களுக்கு அழிவே இல்லை என்பதை நிரூபித்துள்ளது. மற்ற ஊர்வன விலங்குகளைக் காட்டிலும் அதிக அளவில் பச்சோந்திகள் அழிவை சந்தித்து வருகின்றன. 34% பச்சோந்திகள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தென்னாப்பிரிக்க தேசிய பல்லுயிர் நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர் க்றிஸ்டல் டோல்லி தலையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் Clinging to survival: Critically Endangered Chapman's pygmy chameleon Rhampholeon chapmanorum persists in shrinking forest patches என்ற கட்டுரையாக ஓரிக்ஸில் வெளியிடப்பட்டது.
இந்த வகையான பச்சோந்திகள் காட்டின் எல்லைப் புறங்களில், எங்கே அளவுக்கு அதிகமாக சில மரங்கள் இருக்கின்றனவோ அங்கே காணப்படுகின்றன. ஆனால் இவையும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் என்று தெரியாது என்று வருத்தம் தெரிவித்தார். மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் அதிகப்படியான பச்சோந்திகள், மரங்களை அதிக அளவில் இழந்து வரும் காடுகளை வாழிடமாக கொண்டிருப்பது வருத்தத்திற்கு உரியது என்றும் கூறினார்.
3.5 முதல் 5.5 சென்டிமீட்டர் மட்டுமே வளரும் தன்மை கொண்டது சாப்மன்ஸ் பிக்மி பச்சோந்தி. ப்ரவுன் நிறத்தில் இருந்தாலும், எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நீலம் மற்றும் பச்சை நிறங்களுக்கு இவை நிறமாறும் தன்மை கொண்டது என்று டோல்லி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.