gorilla went viral in 2019 dies in the arms of caretaker : காங்கோ நாட்டில் அமைந்துள்ள விருங்கா தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்ததது ஆதரவற்ற கொரில்லாவான நடாகாஷி. தன்னுடைய பாதுகாவலர்களான மேத்யூ மற்றும் பேட்ரிக்குடன் நடை பயிற்சி சென்ற போது அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டது இந்த கொரில்லா. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. பலருக்கும் நடாகாஷி அறிமுகமானது அப்போது தான்.
சில வருடங்களுக்கு முன்பு ஆயுதம் ஏந்திய படையினரால் ஆயிரக்கணக்கான கொரில்லாக்கள் கொல்லப்பட்டன. அதில் அனாதையாக்கப்பட்ட மலை கொரில்லாவில் நடாகாஷியும் ஒன்று. எப்போதும் தன்னுடைய பாதுகாவலருடனே இருக்கும் நடாகாஷி தொடர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தது.
தன்னை காட்டில் இருந்து எடுத்து வந்து பாதுகாத்த பாதுகாவலர் ஆண்டே பௌமா மடியில் படுத்த வண்ணமே அந்த கொரில்லா தன்னுடைய மூச்சை நிறுத்திக்கொண்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வேதனையை ஏற்படுத்தும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
ஆயுதம் ஏந்திய படையினரால் கொல்லப்பட்ட தன்னுடைய தாயின் உடலைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொண்டிருந்த நடாகாஷியை விருங்கா வனத்துறையின் மீட்டு கொண்டு வந்த போது அது 2 மாத குட்டி. அன்றைய பொழுதியில் இருந்து 14 வருடங்கள் நடாகாஷியை பௌமா தான் பராமரித்து வந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil