New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/11/cats-1.jpg)
Trending news ‘meditation grave’ to deal with exam stress
மாணவர்கள் இந்த மயான குழியில் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை இருக்கலாம்.
Trending news ‘meditation grave’ to deal with exam stress
Trending news ‘meditation grave’ to deal with exam stress : நெதர்லாந்து நாட்டில் இருக்கும் நிஜ்மேகன் என்ற ஊரில் அமைந்திருக்கிறது ராட்பௌட் பல்கலைக்கழகம். மாணவர்களின் தேர்வு பயத்தை குறைக்கும் பொருட்டு அவர்களுக்கு தியானம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் நினைப்பது போல் யோகா வகுப்பில் அமர்ந்து கொண்டு யோகா செய்வது போல் இது கிடையாது. மாறாக மயான குழிக்குள் படுத்துக் கொண்டு யோகா செய்வது ஆகும். கேட்கும் போதே கொஞ்சம் 'வியர்ட்’-ஆகவே இருக்கிறது. இருப்பினும் அப்படித்தான் அங்கு இருக்கிறது.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
மாணவர்களுக்கான தேவாலயத்திற்கு பின்புறம் அமைந்திருக்கும் திறந்தவெளி மைதானத்தில் 6 அடிக்கு குழி ஒன்றை வெட்டி அதில் 'ஸ்டே வியர்ட்’ என்று எழுதிய மேட் ஒன்றையும் போட்டிருக்கின்றார்கள். இது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது. புதைக்குழி அனுபவத்தை உணர்வதற்காக பலர் வெய்ட்டிங் லிஸ்டில் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜான் ஹாக்கிங் என்பவர் தான் இந்த ப்ரோஜெக்டின் ஃபவுண்டர். அவர் இந்த திட்டம் குறித்து கூறும் போது “ மாணவர்கள் பூமியுடன் இருக்கும் நேரத்தை இது அதிகரிக்கும். மேலும் இறப்பு என்ற எண்ணம் “கம்ஃபர்ட்டினை” தரும் என்பதற்காக இந்த இதனை உருவாக்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ப்ரோஜெக்ட் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 'மெமெண்ட்டோர் மோரி’ என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த மயான குழியில் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை இருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.