California couple recreates wedding photoshoot : கலிஃபோர்னியாவை சேர்ந்த கரென் மற்றும் காரி ரையான் தங்களின் 59வது திருமண நாளை மாஸாக கொண்டாடியுள்ளனர். 1962ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் எடுத்த புகைப்படங்களையும் தருணங்களையும் மீள் உருவாக்கம் செய்து 2021ம் ஆண்டு திருமண தினத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர். இது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்த அழகிய தருணங்களை புகைப்படங்களாக படம் பிடித்த அவர்களின் பேத்தி நிக்கி, அவர்களின் காதல்… அது மிகவும் தனித்துவமானது. 59 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் எவ்வாறு பார்த்தார்களோ அப்படியே இன்றும், அதே காதலுடன் பார்க்கின்றார்கள். அவர்களின் திருமண நாள் அன்று உருவாக்கப்பட்டது போன்று அதே வடிவில் கேக், அந்த திருமணத்தில் நடைபெற்ற அதே வகையான நடனம் என அனைத்தையும் நாங்கள் மீள் உருவாக்கம் செய்தோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கப்புல்ஸ் கோல்ஸ் ஏதாவது உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் உடனே எங்களுக்கு அதனை கமெண்ட்டில் தெரிவிக்கவும். மேலும் இந்த புகைப்படங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்றும் கூறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil