scorecardresearch

ட்ரெயின்ல தொங்கிட்டு போற நமக்கு, கத்தார் ஏர்வேஸ் புறக்கணிப்பு எல்லாம் தேவைதானா? அரசியல் மீம்ஸ்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் கத்தார் ஏர்வேஸ் புறக்கணிப்பு, அதிமுக – பாஜக உறவு போன்ற அரசியல் தொடர்பான மீம்ஸ்கள் இங்கே

ட்ரெயின்ல தொங்கிட்டு போற நமக்கு, கத்தார் ஏர்வேஸ் புறக்கணிப்பு எல்லாம் தேவைதானா? அரசியல் மீம்ஸ்

Trending Political memes in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

அந்த வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் நூபுர் ஷர்மா, நபிகள் குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கள் தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் அதிகம் வலம் வருகின்றன.

இதில், இந்த விவகாரம் தொடர்பாக கத்தார் நாடு கண்டனம் தெரிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிக்கும் வகையில் பாய்காட் கத்தார் ஏர்வேஸ் என ஹேஷ்டேக் ட்ரெண்டாக, அதில் எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி மீம்ஸ்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒன்றில், இவனுங்க யார புறக்கணிக்கிறோம்னு சொன்னானுங்களோ.. அவங்களே வந்து முதலில் பாய்காட்னு பிழையில்லாமல் ௭ழுத கத்துக்க சொல்லி துப்பிட்டு போய்ட்டாங்க.. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றொரு மீம்ஸில், டேய் சங்கிப் பயல்களா.. ஒரு ட்ரெண்ட் ஒழுங்கா பண்ணத் தெரியுதா.? இதுல தப்பு தப்பா இங்லீஷ் வேற.. Boycot nu போட்துக்குப் பதிலா, Bycot qatarairways போட்றீங்களேடா சங்கிகளா.. என பதிவிடப்பட்டுள்ளது.

அடுத்து ஒரு மீம்ஸில், டேய் I’m against Qatar Airways..னு பதிவு போடுறவன் மூஞ்சிய பார்த்தியா அதுல ஒருத்தன்ட்ட கூட பாஸ்போர்ட்டே இல்லைடா, என பதிவிடப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக அதிமுக- பாஜக உறவு பற்றிய மீம்ஸில், அதிமுக – பாஜக உறவில் விரிசல் இல்லை… எடப்பாடியார் # அத..உங்க ” ஓனரை ” சொல்ல சொல்லுங்க…!!!! என எழுதப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Trending political memes in tamil