Today’s trending tamil memes: ஸ்மார்ட்போன்களின் வருகையால் இன்று அதிகமான மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த சமூக ஊடகங்களில் ட்விட்டர், பேஸ்புக், ஷேர் ஷாட், இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாட்டு தளங்கள் பிரபலமானவையாக உள்ளன. இவற்றை நாம் பயன்படுத்த ஒருசில முக்கிய காரணங்கள் இருக்கும். ஆனால் சிலர், இன்றைய தினம் என்னென்ன மீம்ஸ்கள் பதிவிடப்பட்டுள்ளன? என்பதை பார்ப்பதற்காகவே விசிட் அடித்து வருகின்றனர்.
அந்த வகையில், நீங்களும் மீம்ஸ் விரும்பியாக இருந்தால், நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இன்றைய ட்ரெண்டிங் மற்றும் கலக்கல் மீம்ஸ்களை இங்கு தொகுத்துள்ளோம். அவற்றை கண்டு களித்து உங்களுக்கு விருப்பமானவர்களுடன் பகிரலாம்.
தக்காளி காய்ச்சல் மீம்ஸ்:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அதிக பாதிப்பு காரணமாக கொல்லம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மாநிலம் முழுதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்த செய்தியை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

பெட்ரோல் – டீசல் ட்ரோல் மீம்ஸ்:
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை அனைத்தும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த நிலையில், 34வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது நெட்டிசன்கள் பெட்ரோல் – டீசல் குறித்து வழக்கம் போல் ட்ரோல் செய்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்:











“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“