Advertisment

நெகிழ்ச்சி வீடியோ: இது வெற லெவல் நட்பு.. உயிரை பணயம் வைத்து நண்பனை காப்பாற்றிய நாய்!

தன் இனத்திற்கு பிரச்சனை என்று வந்தவுடன் தனது உயிரை பணயம் வைக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trending video in internet

trending video in internet

trending video in internet : இந்த வீடியோவை பார்க்கும் எல்லோருக்கும் கண்டிப்பாக தங்கள் நண்பர்களின் ஞாபகம் வரும். அப்படி இல்லையென்றால் அவரவர்களின் வளர்ப்பு பிராணியின் ஞாபகம் வரும்.

Advertisment

முஸ்தப்பா முஸ்தப்பா, என் நண்பன் போட்ட சோறு போன்ற பாடல்களை விரும்பி விரும்பி கேட்பவர்கள் இந்த நாய்களின் நட்பின் இலக்கணத்தை கொஞ்சம் பாருங்கள். கண்டிப்பாக வியந்து விடுவீர்கள். 5 அறிவுக் கொண்ட ஜீவன்களே தன் இனத்திற்கு பிரச்சனை என்று வந்தவுடன் தனது உயிரை பணயம் வைக்கிறது. ஆறு அறிவு படைத்த நாம் என்ன செய்கிறோம் என்பதை சற்று நினைத்து பாருங்கள்.

சீனாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ காலை முதல் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் குய்ங்யுவான் ஆற்றில் தனது வளர்ப்பு பிராணியுடன் போட்டிங் சென்ற நபர் மறந்து அந்த நாயை படகில் விட்டு விட்டார்.இதனால் ஆற்றின் நீரில் மிதந்துகொண்டிருக்கும் படகில் அந்த நாய் உயிருக்கு போராடி கரையேற முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது.

இதைப் பார்த்த அந்த நாயின் நண்பனான மற்றொரு நாய், படகில் தத்தளிக்கும் தனது நண்பனை காப்பாற்றும் படி குரல் எழுப்புகிறது. யாரும் கவனிக்காததால் கடைசியில் அதுவே தனது உயிரை பணயம் வைத்து ஆற்றி மிதந்து சென்று, படகின் கயிறை பிடித்து இழுத்து, குட்டி நாயை கரை சேர்க்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு படு வைரலாக சென்றுக் கொண்டிருக்கிறது. நண்பனை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து களம் இறங்கிய நாயின் வீடியோ பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Viral Social Media
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment