இது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பசங்களோட ஆயுத பூஜை! இணையத்தை கலக்கும் டக்கரு வீடியோ

நீங்க அந்நியாயம் பண்றீங்கப்பா

Trending video today :”எந்த பக்கம் திரும்பினாலும் இந்த இன்ஜினியரிங் பசங்களோட தொல்லை தாங்கலப்பா” என அடிக்கடி புலம்பும் பெற்றோர்களே, நண்பர்களே, உறவினர்களே தயவு செய்து இந்த வீடியோவை பார்க்காதீங்க. ஒருவேளை பார்த்துட்டு ”இவங்க அலப்பறைக்கு அளவே இல்லையா” ன்னு அடுத்த அட்டாக்கை நீங்கள் அவர்கள் மேல் வைத்தால் நாங்கள் பொறுப்பல்ல.

இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்டி, கடை, ஆட்டோ போன்ற தொழிலுக்கு உதவும் அனைத்து பொருட்களுக்கும் பூஜை போட்டு வணங்குவது ஆயுத பூஜை அன்று செய்யப்படும் வழக்கமான வழிமுறை. ஆனால் இது கொஞ்சம் எல்லை மீறி இன்று போய் விட்டது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை சேர்ந்தவர்கள் தங்களது அலுவலகத்தில் கொண்டாடிய ஆயுத பூஜை வீடியோ தான் அது. டிக் டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ இப்போது ட்விட்டரில் அதிகம் பரவி வருகிறது.

இதில் அல்டிமேட் என்னவென்றால், சாமிக்கு பூஜை போடுவது, ஆரத்தி எடுப்பது, கற்பூரம் காட்டுவது அனைத்தும் அவர்கள் கண்டுப்பிடித்து வைத்திருக்கும் மிஷின் தான். பார்த்தீங்களா? எப்படி தீயா வேலை செஞ்சிருகாங்கன்னு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close